search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூப்பர் லீக் கால்பந்து: புனே அணியை வென்றது கேரளா
    X

    சூப்பர் லீக் கால்பந்து: புனே அணியை வென்றது கேரளா

    சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நேற்றிரவு ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி புனேயை வீழ்த்தி 18 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியது.
    கொச்சி :

    3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்றிரவு கொச்சியில் நடந்த 48-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- புனே சிட்டி அணிகள் மோதின. 7-வது நிமிடத்திலேயே கேரள அணி கோல் அடித்து குழுமியிருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. டக்கென்ஸ் நஜோன் இந்த கோலை அடித்தார்.

    பிற்பாதியில் 57-வது நிமிடத்தில் சி.கே.வினீத் தட்டிக்கொடுத்த பந்தை, கேரள கேப்டன் ஆரோன் ஹியூஸ் தலையால் முட்டி கோலாக்கினார். பதில் கோல் திருப்ப போராடிய புனே அணி கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) ஒரு கோல் போட்டது. ‘பிரீ கிக்’ வாய்ப்பில் அந்த அணியின் அனிபால் ரோட்ரிகஸ் இந்த கோலை அடித்தார். அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.

    முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் புனேயை வீழ்த்தி 18 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியது. சொந்த ஊரில் கேரள அணி தொடர்ச்சியாக பெற்ற 4-வது வெற்றி இதுவாகும்.
    Next Story
    ×