search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: இந்திய அணிக்கு ஹர்ஜீத் கேப்டன்
    X

    ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: இந்திய அணிக்கு ஹர்ஜீத் கேப்டன்

    ஜூனியர் ஹாக்கை உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக ஹர்ஜித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் டிசம்பர் 8-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, அர்ஜென்டினா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஸ்பெயின், ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன.

    இதில் பங்கேற்கும் 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக நடுக்கள வீரர் ஹர்ஜீத் சிங் (வயது 20) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பஞ்சாப் மாநிலம் குராலியைச் சேர்ந்தவர். தடுப்பாட்ட வீரர் திப்சன் திர்கே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்ஜீத் சிங்கிற்கு இந்த ஆண்டின் துவக்கத்தில் ஹாக்கி இந்தியா விருது வழங்கப்பட்டது. மேலும், சுல்தான் அஸ்லான் ஷா போட்டிக்கான சீனியர் ஆண்கள் அணியிலும் இடம்பெற்றார். அவர் இடம் பெற்ற சீனியர் அணி, லண்டனில் நடந்த சாம்பியன் டிராபியில் வெள்ளிப்பதக்கம் வென்றது.

    இதேபோல் திர்கேயும் களத்தில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். 18 வயதான திர்கே தலைமையிலான அணி, ரஷ்யாவில் நடைபெற்ற யூரோஆசியா கோப்பை தொடரில் சிறப்பான வெற்றி பெற்றது. அதன்பின்னர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போதும் வெற்றிகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×