search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி டிராபி கிரிக்கெட்: பஞ்சாப் அணியை தமிழ்நாடு வீழ்த்துமா?
    X

    ரஞ்சி டிராபி கிரிக்கெட்: பஞ்சாப் அணியை தமிழ்நாடு வீழ்த்துமா?

    நாளை நடைபெறும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சிறப்பான நிலையில் இருப்பதால் பஞ்சாபை வீழ்த்துமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாக்பூர்:

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் 28 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    ‘ஏ’ பிரிவில் 9 அணிகளும் ‘பி’ பிரிவில் 9 அணிகளும் ‘சி’ பிரிவில் 10 அணிகளும் இடம் பெற்றுள்ளன. ‘லீக்‘ முடிவில் ஏ மற்றும் பி பிரிவில் இருந்து முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளும், ‘சி’ பிரிவில் இருந்து முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளும் கால் இறுதிக்கு முன்னேறும்.

    தமிழக அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. மும்பை, குஜராத், பஞ்சாப், பெங்கால், மத்திய பிரதேசம், ரெயில்வே, உத்தரபிரதேசம், பரோடா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    தமிழக அணி 6 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. ரெயில்வே, பரோடாவை வீழத்தி இருந்தது. மத்திய பிரதேசம், பெங்கால், உத்தரபிரதேசம் ஆகிய அணிகளுடன் ‘டிரா’ செய்தது. மும்பையிடம் தோற்று இருந்தது.

    7-வது ஆட்டத்தில் தமிழக அணி பஞ்சாபை எதிர் கொள்கிறது. இந்தப் போட்டி நாக்பூரில் நாளை முதல் 24-ந்தேதிவரை நடக்கிறது.

    அபினவ் முகுந்த் தலைமையிலான தமிழக அணி சிறப்பான நிலையில் இருப்பதால் பஞ்சாபை வீழ்த்துமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபினவ் 3 சதம் அடித்துள்ளார். இது தவிர தினேஷ்கார்த்திக் (520 ரன்), பாபா அபராஜித் (39 6 ரன்), கவுசிக் காந்தி (322 ரன்), விக்னேஷ் (26 விக்கெட்), அஸ்வின் கிரைஸ்ட் (20 விக்கெட்), அவுசிக் சீனிவாஸ் (15 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    பஞ்சாப் அணிக்கு ஹர்பஜன்சிங் கேப்டனாக உள்ளார். யுவராஜ்சிங், மன் தீப்சிங், வோரா, குர்கெரத் சிங் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் இருப்பதால் தமிழ்நாடு கடுமையாக போராட வேண்டும். பஞ்சாப் அணி 2 வெற்றி 2 டிரா, ஒரு தோல்வியுடன் 16 புள்ளி பெற்றுள்ளது.

    Next Story
    ×