search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி
    X

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி

    மலேசியாவில் நடைபெற்று வரும் நான்காவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா அரையிறுதியில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    மலேசியாவில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதியொன்றில் இந்தியா - தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் முழு நேர முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்து 2-2 என சமநிலை அடைந்தன. இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

    முதலில் பெனால்டி வாய்ப்பை அடிக்கும் வாய்ப்பை பெற்ற இந்தியா தொடர்ந்து 5 முறையும் கோல்கள் அடித்தது. தென்கொரியாவின் முதல் நான்கு வீரர்களும் கோல் அடித்தனர். இதனால் 5-4 என இந்தியா முன்னிலையில் இருந்தது.

    கடைசி வாய்ப்பை தென்கொரிய வீரர் அடித்தார். அதை இந்திய விக்கெட் கீப்பர் ஸ்ரீஜேஷ் சிறப்பான வகையில் தடுத்தார். இதனால் இந்தியா ‘பெனால்டி ஷூட்’ முறையில் 5-4 என தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    2011-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 2012-ல் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்தது. தற்போது 3-வது முறையாக இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    Next Story
    ×