search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பீல்டிங்- கப்தில் 12 ரன்னில் அவுட்
    X

    முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பீல்டிங்- கப்தில் 12 ரன்னில் அவுட்

    தரம்சாலாவில் நடைபெற்றும் வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று மதியம் 1.30 மணிக்கு இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா அறிமுக வீரராக இடம்பிடித்துள்ளார். நியூசிலாந்து அணியில் டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத கோரி ஆண்டர்சன், டிம் சவுத்தி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் சர்மா, 2. ரகானே, 3. விராட் கோலி, 4. மணீஷ் பாண்டே, 5. டோனி, 6. கேதர் ஜாதவ், 7. ஹர்திக் பாண்டியா, 8. அக்சார் பட்டேல், 9. அமித் மிஷ்ரா, 10. பும்ப்ரா, 11. உமேஷ் யாதவ்.

    நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மார்ட்டின் கப்தில், 2. லாதம், 3. வில்லியம்சன், 4. டெய்லர், 5. ஆண்டர்சன், 6. நீசம், 7. ரோஞ்சி, 8. சான்ட்னெர், 9. டிம் சவுத்தி, 10. சோதி, 11. பிரேஸ்வெல்.

    கப்தில் மற்றும் லாதம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஒவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசிய கப்தில் கடைசி பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அறிமுக போட்டியில் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தி பாண்டியா அசத்தினார்.

    அடுத்து கேப்டன் வில்லியம்சன் களம் இறங்கினார். நியூசிலாந்து அணி 4 ஓவர்கள் முடிந்த நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    Next Story
    ×