search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலககோப்பை கபடி: இந்தியா அபார வெற்றி
    X

    உலககோப்பை கபடி: இந்தியா அபார வெற்றி

    உலககோப்பை கபடி போட்டியில் அர்ஜென்டினாவை எளிதில் வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது.

    ஆமதாபாத்:

    3-வது உலககோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

    2 முறை சாம்பியனான இந்திய அணி நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 74-20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    54 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்த அபார வெற்றியை பெற்றது. அஜய் தாக்கூர் 14 புள்ளியும், ராகுல் சவுத்ரி 11 புள்ளியும், சுர்ஜித் 6 புள்ளியும் எடுத்தனர்.

    இந்திய அணி பெற்ற 3-வது வெற்றியாகும். ஏற்கனவே ஆஸ்திரேலியா, வங்காளதேசத்தை வென்று இருந்தது. தென் கொரியாவிடம் தோற்று இருந்தது. 4 ஆட்டத்தில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி அரை இறுதியை நெருங்கிவிட்டது.

    இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இங்கிலாந்தை 18-ந்தேதி எதிர்கொள்கிறது.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென் கொரியா 63-25 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அந்த அணி தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா 3-வது தோல்வியை தழுவியது.

    ‘பி’ பிரிவில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் ஈரான் அணி 38-34 என்ற புள்ளிக்கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதன்மூலம் 4-வது வெற்றியை பெற்று ஈரான் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. ஜப்பான் அணி முதல் தோல்வியை தழுவியது.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் தாய்லாந்து- அமெரிக்கா (மாலை 6.50 மணி), தென்கொரியா- இங்கிலாந்து (இரவு 8 மணி), ஜப்பான்- கென்யா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×