என் மலர்

  செய்திகள்

  டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்கு
  X

  டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது தூத்துக்குடி.
  தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற தூத்துக்குடி அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங் தேர்வு செய்தார்.

  அதன்படி அந்த அணியின் கவுசிக் காந்தி, அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தனர். இதனால் ஓவருக்கு சராசரியாக 9 ரன்கள் வந்து கொண்டிருந்தது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

  இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் குவித்தது. கவுசிக் காந்தி 43 பந்தில் 59 ரன்கள் சேர்த்து சாய் கிஷோர் பந்தில் ஆட்டம் இழந்தார். அவரது ஸ்கோரில் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும். தூத்துக்குடி அணி 13.4 ஓவரில்தான் முதல் விக்கெட்டை இழந்தது.

  2-வது விக்கெட்டுக்கு அபிநவ் முகுந்துடன் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடினார். 16-வது ஓவரை அந்தோணி தாஸ் வீசினார். இந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார்.

  17-வது ஓவரை யோ மகேஷ் வீசினார். இந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். 18-வது ஓவரை அஷ்வத் முகுந்தன் வீசினார். முதல் பந்தில் அவரிடம் அபிநவ் முகுந்த் கொடுத்த கேட்ச்சை பிடிக்க தவறினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸ் ஒன்று விளாசினார்.

  19-வது ஓவரை அந்தோணி தாஸ் வீசினார். இந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸ் அடிக்க, அபிநவ் முகுந்த் ஒரு பவுண்டரி அடித்தார். 19 ஓவரில் தூத்துக்குடி அணி 200 ரன்னைத் தொட்டது. கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க தூத்துக்குடி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்துள்ளது. தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரின் 5-வது பந்தில் 55 ரன்கள் குவித்த நிலையில் ரன்அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும். அபிநவ் முகுந்த் 52 பந்தில் 12 பவுண்டரி, 1 சிக்ஸ் உடன் 82 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

  216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சேஸிங் செய்து வருகிறது.
  Next Story
  ×