search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்:  அரையிறுதிக்கு முன்னேறினார் வாவ்ரிங்கா
    X

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் வாவ்ரிங்கா

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் வாவ்ரிங்கா முன்னாள் சாம்பியனான ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை வீழ்த்தி மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.
    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், இன்று நடைபெற்ற கால்இறுதி ஆட்டத்தில் உலக தர வரிசையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலையில் உள்ள வாவ்ரிங்கா, முன்னாள் சாம்பியனான அர்ஜெண்டினாவை சேர்ந்த போட்ரோவை எதிர்த்து விளையாடினார்.

    இந்த போட்டியில் 7-6(5), 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் போட்ரோவை வீழ்த்தினார்.  

    இந்த வெற்றியின் மூலம் வாவ்ரிங்கா ஜப்பானின் கெய் நிஷிகோரியை எதிர்த்து அரையிறுதி போட்டியில் விளையாடுவார்.

    நாளை நடைபெறும் மற்றொரு ஆடவர் அரையிறுதி போட்டியில்  நவாக் ஜோகோவிச் பிரான்சின் கேயெல் மோன்பில்சை எதிர்த்து விளையாடுவார்.
    Next Story
    ×