search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதிக்கு ஆன்டி முர்ரே தகுதி
    X

    விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதிக்கு ஆன்டி முர்ரே தகுதி

    விம்பிள்டன் டென்னிஸ் நேற்றைய காலிறுதி போட்டியில் பிரான்ஸ் வீரர் சோங்காவை வென்று இங்கிலாந்து வீரார் ஆன்டி முர்ரே அரையிறுதிக்கு முன்னேறினார்
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில்நேற்று நடந்த ஒரு கால் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலைவீரர் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 12ம்நிலை வீரர் சோங்கா (பிரான்ஸ்) மோதினார்.

    முதல் இரண்டு செட்டுகளை ஆன்டி முர்ரே கைப்பற்றினார், அதன் பின் சுதாரித்து கொண்ட சோங்கா அடுத்த இரண்டு செட்டுகளை தனதாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

    இதனால் கடைசி செட் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த செட்டை ஆன்டி முர்ரே எளிதாக கைப்பற்றினார்.

    முடிவில் சோங்காவை 7-6 (12-10), 6-1, 3-6,4-6,6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஆன்டி முர்ரே அரை இறுதிக்கு முன்னேறினார். மற்ற கால் இறுதி ஆட்டங்களில் ரோ‌ஷர் பெடரர், (சுவிட்சர்லாந்து) ரோனிக் (கனடா) தாமஸ் பெர்டிக் (செக் குடியரசு) ஆகியோர் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். ஒரு அரை இறுதியில் ரோசர்பெடரர்- ரோனிக் மோதுகிறார்கள். மற்றொரு அரை இறுதியில் ஆன்டி முர்ரே- தாமஸ் பெர்டிக் பலப்பரீச்சை நடத்துகிறார்கள்

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. ஒரு அரை இறுதியில் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்(அமெரிக்கா) வெஸ்னினா (ரஷியா) மோதுகிறார்கள். இன்னொரு அரை இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) செர்பர் (ஜெர்மனி) மோதுகின்றனர்.

    Next Story
    ×