search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 டெஸ்ட் போட்டி: இந்திய அணி 6-ந்தேதி வெஸ்ட்இண்டீஸ் பயணம்
    X

    4 டெஸ்ட் போட்டி: இந்திய அணி 6-ந்தேதி வெஸ்ட்இண்டீஸ் பயணம்

    இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்டில் விளையாடுகிறது. இதற்காக வருகிற 6-ந்தேதி இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு புறப்படுகிறது.
    பெங்களூர்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்டில் விளையாடுகிறது. இதற்காக வருகிற 6-ந்தேதி இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு புறப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 22-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் நிறைவு பெறுகிறது.

    இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. வருகிற 9-ந்தேதி பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது.

    வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய வீரர்களின் பயிற்சி முகாம் பெங்களூரில் இன்று தொடங்கியது. அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கும்ப்ளே மேற்பார்வையில் வீரர்கள் பயிற்சி பெற்றனர்.

    அவர் கடைசியாக 2008-ம் ஆண்டு அணியின் கேப்டனாக பயிற்சி பெற்றார். தற்போது பயிற்சியாளராக இந்திய வீரர்களுடன் இணைந்து உள்ளனர். கும்ப்ளே-விராட்கோலியின் புதிய கூட்டணி பயிற்சியின் போது பல்வேறு வி‌ஷயங்களை ஆராய்ந்து பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் அபய் சர்மா ஆகியோரும் பயிற்சி முகாமில் பங்கேற்று வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள். வருகிற 4-ந்தேதி வரை இந்த பயிற்சி முகாம் நடக்கிறது.

    கும்ப்ளே ஒரு ஆண்டுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஒரு ஆண்டில் இந்திய அணி 17 டெஸ்டில் விளையாடுகிறது. 4 டெஸ்டை தவிர்த்து மீதியுள்ள 13 டெஸ்டும் இந்திய மண்ணில் நடக்கிறது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் தொடர் மட்டுமே கும்ப்ளேக்கு சவாலாக இருக்கும்.

    வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:-

    விராட் கோலி (கேப்டன்), ரகானே (துணை கேப்டன்), தவான், முரளி விஜய், புஜாரா, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, விருத்திமான் சகா, ஸ்டுவர்ட் பின்னி, அஸ்வின், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ராகுல், ‌ஷர்துல் தாக்கூர்.
    Next Story
    ×