search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் குத்துச்சண்டை போட்டி ஜூலை 16-ந் தேதி நடக்கிறது
    X

    ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் குத்துச்சண்டை போட்டி ஜூலை 16-ந் தேதி நடக்கிறது

    டெல்லியில் ஜூலை 16-ந் தேதி நடக்கும் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விஜேந்தர்சிங், ஆஸ்திரேலியாவின் கெர்ரி ஹோப்பை சந்திக்கிறார்.
    தொழில்முறை வீரர்களுக்கான ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் பட்டத்துக்கான குத்துச்சண்டை போட்டி டெல்லியில் ஜூலை 16-ந் தேதி நடக்கிறது. இதில் இந்திய வீரர் விஜேந்தர்சிங், ஆஸ்திரேலியாவின் கெர்ரி ஹோப்பை சந்திக்கிறார்.

    இது குறித்து விஜேந்தர்சிங் அளித்த ஒரு பேட்டியில், இந்த போட்டியில் பட்டத்தை வெல்வதற்காக நான் கடினமாக பயிற்சி எடுத்து வருகிறேன். நான் இன்னும் அமெச்சூர் வீரராக தான் இருக்கிறேன் என்று கெர்ரி சொல்லி இருப்பதை படித்தேன்.

    அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. அதிக நம்பிக்கையுடன் பேசி இருக்கும் கெர்ரிக்கு எனது குத்துகள் பதில் சொல்லும். இந்த போட்டியில் வென்று நாட்டு மக்களுக்கு பெருமை சேர்க்க முடியும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். 
    Next Story
    ×