search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி: தொடரை முழுவதுமாக கைப்பற்றியது
    X

    ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி: தொடரை முழுவதுமாக கைப்பற்றியது

    3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை முழுவதுமாக கைப்பற்றியுள்ளது.
    ஹராரே:

    இந்திய-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும்  இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அந்த அணியில், சிபந்தா(38), ரன்கள், சிபபா(27) ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 22 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

    இதையடுத்து 124 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாடியது. சாகல், அறிமுக வீரர் பஸல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதலில் நிதானமாக விளையாடி இந்த ஜோடி, 10 ஓவர்களில் 43 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதியில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

    ராகுல் 2 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 63 ரன்களும், பஸல் 55 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. 63 ரன்கள் எடுத்த ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த தொடரில் ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட ராகுல் 196 ரன்கள் குவித்த ராகுல் தொடர் நாயகன் விருதும் பெற்றார். இந்த தொடரில், பும்ரா அதிகபட்சமாக 9 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார். தனது அறிமுக போட்டியில் பாஸல் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

    இந்த வெற்றியின் மூலம் ஆலன்பார்டர் சாதனையை தோனி சமன் செய்துள்ளார். இதுவரை 107 ஒருநாள் போட்டிகளில் தோனி வெற்றியை தந்துள்ளார்.

    Next Story
    ×