search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபா அமெரிக்கா கால்பந்து: பனாமா அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது சிலி
    X

    கோபா அமெரிக்கா கால்பந்து: பனாமா அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது சிலி

    45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பனாமா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதால் சிலி அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
    பில்லேடெல்பியா:-

    45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் சிலி- பனாமா அணிகள் மோதின. இதில் வெல்லும் அணி கால்இறுதி வாய்ப்பை பெறும் என்ற நிலையில் இரு அணிகளும் களம் இறங்கின. இதனால் இரு அணி வீரர்கள் அக்ரோஷத்தை காட்டினர்.

    5-வது நிமிடத்தில் பனாமா வீரர் கமார்கோ கோல் அடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிலி வீரர்கள் வேகத்தை கூடினர். அந்த வீரர் வர்காஸ் 15-வது நிமிடத்திலும், 43-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினார். முதல் பாதியில் சிலி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    2-வது பாதியில் சிலி வீரர் சான்சீஸ் 50-வது நிமிடத்தில் தனது அணிக்கு 3-வது கோலை அடித்தார். 75-வது நிமிடத்தில் பனாமா வீரர் அர்ரோயோ 2-வது கோலை அடித்தார்.

    3-2 என்ற கோல் கணக்கில் இருந்ததால் பனாமா வீரர்கள் மற்றொரு கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் 89-வது நிமிடத்தில் சிலி வீரர் சான்சீஸ் 4-வது கோலை அடித்தார். ஆட்ட முடிவில் சிலி அணி 4-2 என்ற கோல் கணக்கில் பனாமாவை தோற்கடித்தது.

    வர்காஸ், கான்சீஸ் தலா 2 கோல்கள் அடித்தனர். இந்த வெற்றி மூலம் சிலி அணி கால்இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி கால்இறுதியில் மெக்சிகோவுடன் (18-ந்தேதி) மோதுகிறது.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்தது. லமெலா (13-வது நிமிடம்), லெவிஸ்சி (15-வது நிமிடம்), குயிஸ்டா (32) தலா ஒரு கோல் அடித்தனர்.

    இன்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தது. நாளை முதல் கால்இறுதி போட்டி நடக்கிறது. இதில் அமெரிக்கா- ஈக்வேடார் அணிகள் மோதுகின்றன. 17-ந்தேதி நடக்கும் 2-வது கால்இறுதியில் கொலம்பியா- பெரு அணிகளும், 18-ந்தேதி நடக்கும் ஆட்டங்களில் அர்ஜென்டினா- வெனிசூலா, மெக்சிகோ-சிலி அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    Next Story
    ×