search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐரோப்பிய கால்பந்து: ஹங்கேரி அணியிடம் ஆஸ்திரியா தோல்வி
    X

    ஐரோப்பிய கால்பந்து: ஹங்கேரி அணியிடம் ஆஸ்திரியா தோல்வி

    நேற்று நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து ஆட்டத்தில் ஹங்கேரி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது.
    போர்டெக்ஸ்:

    15-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் எப் பிரிவில் உள்ள ஹங்கேரி-ஆஸ்திரியா அணிகள் மோதின.

    இரு அணி வீரர்கள் கோல் அடிக்க முனைப்பு காட்டினார்கள். ஹங்கேரி அணி வசம் பந்து அதிக நேரம் இருந்தது. முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை. 2-வது பாதி ஆட்டத்தில் ஹங்கேரி அணி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    62-வது நிமிடத்தில் ஸ்சாலய் கோல் அடித்தார். சகவீரர் லென்ஹஸ்லர் கடத்தி கொடுத்த பந்தை லாவவகமாக வாங்கி கோல் அடித்தார்.

    66-வது நிமிடத்தில் ஆஸ்திரியா வீரர் டிரகோவிக் 2-வது மஞ்சள் அட்டை பெற்றதால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் விளையாடும் நிலை ஆஸ்திரியாவுக்கு ஏற்பட்டது. இது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

    87-வது நிமிடத்தில் ஹங்கேரி 2-வது கோலை போட்டது. மாற்று வீரராக களம் இறங்கிய ஸ்டைபெர் அந்த கோலை அடித்தார். ஆட்டம் முடிவில் ஹங்கேரி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - ஐஸ்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரபல வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ கேப்டனாக உள்ள போர்ச்சுக்கல் அணி தொடக்கம் முதலே வேகத்தை காட்டியது.

    31-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் நானி கோல் அடித்தார். இதனால் உற்சாகம் அடைந்த போர்ச்சுகல் அணி 2-வது கோலை அடிக்க முயற்சித்தது. ஆனால் அதை ஐஸ்லாந்து வீரர்கள் சாதுரியமாக தடுத்தார்.

    முதல் பாதியில் போர்ச்சுக்கல் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது பாதியில் பதில் கோல் அடித்து போர்ச்சுக்கல்லுக்கு ஐஸ்லாந்து அதிர்ச்சி அடைந்தது. 50-வது நிமிடத்தில் ஐஸ்லாந்து வீரர் பிஜார் நெசன் கோல் அடித்தார்.

    90 நிமிடம் முடியும் வரை இரு அணிகளாலும் 2-வது கோல் அடிக்க முடியவில்லை. வீணான நேரத்தை ஈடுகட்ட கொடுக்கப்பட்ட கூடுதல் 5 நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணிக்கு பிரீ-கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை ரொனால்டோ தவறவிட்டு ஏமாற்றம் அளித்தார். முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.
    Next Story
    ×