என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சர்பராஸ் கானை ரூ. 75 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.
    • கடந்த 2 சீசன்களாக அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இதில், 77 வீரர்களை அணிகள் வாங்கின. அதில் சர்பராஸ் கானை ரூ. 75 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

    இந்நிலையில், மினி ஏலத்தில் தன்னை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சர்பராஸ் கான் சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் எனக்கு புதிய வாழ்க்கை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.

    மேலும் அவரது ஸ்டோரியில் நடிகர் நானி நடித்த ஜெர்சி படத்தில் உள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் அணிக்குத் தேர்வான மகிழ்ச்சியை வெளிப்படுத்த, தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரயில் நிலையத்திற்குச் சென்று, வரும் ரயிலின் சத்தத்திற்கு இணையாக தனது சந்தோஷத்தை கத்தி நானி வெளிப்படுத்துவார்.

    ஐபிஎல் தொடரில் 2015 முதல் 2023 வரை பல்வேறு அணிகளுக்காக சர்ப்ராஸ் கான் விளையாடியுள்ளார். கடந்த 2 சீசன்களாக அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பார்முக்கு திரும்பினால், பேட்டிங் மேலும் வலுவடையும்.
    • தென்ஆப்பிரிக்க அணி சரிவில் இருந்து மீண்டு தொடரை சமன் செய்ய தீவிரம் காட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், நியூ சண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் மீண்டும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று நடக்கிறது. முந்தைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 117 ரன்னில் சுருட்டி அசத்திய இந்திய அணி அதே உத்வேகத்துடன் தொடரை கைப்பற்ற வரிந்து கட்டுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு ஒரு அரைசதம் கூட அடிக்காத இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பார்முக்கு திரும்பினால், பேட்டிங் மேலும் வலுவடையும்.

    அதே சமயம் பேட்டிங்கில் தடுமாறும் தென்ஆப்பிரிக்க அணி சரிவில் இருந்து மீண்டு தொடரை சமன் செய்ய தீவிரம் காட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 5.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
    • அகீல் ஹொசைன் சிஎஸ்கேவால் ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

    2026 உலகக்கோப்பைக்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று மதியம் அபுதாபியில் நடைபெற்றது. ஏலத்தில் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலம் எடுத்தன.

    இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான பிரபல சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 5.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

    அதேபோல் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் அகீல் ஹொசைன் சிஎஸ்கேவால் ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

    மேலும் சர்ஃபராஸ் கான் ரூ. 75 லட்சம், மேத்யூ ஷார்ட் ரூ. 1.50 கோடி மற்றும் மாட் ஹென்றி ரூ. 2 கோடிக்கும் சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

    • ஆசிய கோப்பையில் தென்கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் தில்பிரீத் சிங் (2 கோல்கள்) அடித்தார்.

    2025-ம் ஆண்டில் ஹாக்கி தொடர்களில் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. அதில் பீகாரின் ராஜ்கிரில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு இந்தியா நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.


    இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் தில்பிரீத் சிங் (2 கோல்கள்), சுக்ஜீத் சிங் மற்றும் அமித் ரோஹிதாஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் குறிப்பிடத்தக்கது.

    சீனாவில் நடைபெற்ற பெண்கள் ஆசியக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் சீனாவிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்தியப் பெண்கள் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.


    FIH ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை 2025 (FIH Men's Junior World Cup) சென்னையில் நடைபெற்றது, இது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த நிகழ்வு. இதில் இந்திய அணி முதல்முறையாக வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தது.


    சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை தொடரின் அரையிறுதியில் கனடாவை 14-3 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் இந்தியப் பெண்கள் ஐஸ் ஹாக்கி அணி தனது முதல் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது.

    • ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா அணி எடுத்துள்ளது.
    • இலங்கையின் மதீஷா பதிரனாவை ரூ.18 கோடிக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் எடுத்தது.

    அபுதாபி:

    19-வது இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் ஏலம் அபுதாபியில் இன்று நடைபெற்றது.

    ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், இலங்கையின் பதிரனா, இந்தியாவின் ரவி பிஷ்னோய், வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்டோர் அதிக விலை போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிகபட்சமாக விலை போன டாப் 5 வீரர்கள் விவரம் வருமாறு:

    கேமரூன் கிரீன்: ரூ.25.20 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    மதிஷா பதிரனா: ரூ.18 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    லியாம் லிவிங்ஸ்டன்: ரூ.13 கோடி- சன் ரைசர்ஸ் ஐதராபாத்

    பிரசாந்த் விர்: ரூ.12.40 கோடி -சென்னை சூப்பர் கிங்ஸ்

    கார்த்திக் சர்மா: ரூ.12.40 கோடி -சென்னை சூப்பர் கிங்ஸ்

    • 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
    • வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.9.20 கோடிக்கு வாங்கியது.

    அபுதாபி:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.

    இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், இங்கிலாந்தைச் லியம் லிவிங்ஸ்டன் முதல் சுற்றில் விலைபோகவில்லை. அடுத்து நடந்த இரண்டாவது சுற்றில் அவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ.13 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

    • மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
    • இரு அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி நாளை லக்னோவில் நடக்கிறது.

    லக்னோ:

    இந்தியா-தென் ஆப்பி ரிக்கா அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

    இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 ஓவரில் 3 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

    கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் 101 ரன் வித்தியாசத்திலும், தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

    நியூ சண்டிகரில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    கடைசி 2 போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடல் நலம் சரியில்லாததால் அக்சர் படேல் விலகியுள்ளார். கடந்த ஆட்டத்திலும் அவர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது அணிக்கு தேர்வாகியுள்ளார்.

    31 வயதான ஷாபாஸ் அகமது 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டி20 ஆட்டத்தில் இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார். நாளைய ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. ஏனென்றால் 3-வது போட்டியில் அக்சர் படேல் இடத்தில் குல்தீப் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினார்.

    பேட்டிங்கில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடுகிறார். முதல் 2 ஆட்டத்திலும் சொதப்பிய சுப்மன் கில் கடந்த போட்டியில் சராசரி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

    மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது. இதில் தோற்றால் தொடரை இழந்துவிடும். அந்த அணி இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்யும் வேட்கையில் உள்ளது.

    கேப்டன் மார்க்ரம், குயின்டன் டி காக், பிரேவிஸ், மில்லர், யான்சென், நிகிடி, டொனவன் பெராரியா போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    இரு அணிகளும் 34 டி20 போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 20-ல், தென் ஆப்பிரிக்கா 13-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    • 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
    • அன்கேப்டு பிளேயர்கள் 2 பேரை 14.20 கோடிக்கு சி.எஸ்.கே. அணி வாங்கியது.

    அபுதாபி:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.

    இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

    • முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 408 ரன்களைக் குவித்தது.
    • அந்த அணியின் அபிக்யான் குண்டு இரட்டை சதமடித்து அசத்தினார்.

    துபாய்:

    12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

    'ஏ' பிரிவில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியா உடன் மோதியது. டாஸ் வென்ற மலேசியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 408 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக அபிக்யான் குண்டு சிக்சர், பவுண்டரிகளாக விளாசி 209 ரன்கள் குவித்தார்.

    மலேசியா சார்பில் முகமது அக்ரம் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 409 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மலேசியா அணி களமிறங்கியது. இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மலேசிய அணி விரைவில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    இறுதியில், 32.1 ஓவரில் மலேசிய அணி 93 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் 315 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்தியா சார்பில் தீபேஷ் தேவேந்திரன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகனாக அபிக்யான் குண்டு தேர்வு செய்யப்பட்டார்.

    • கூலி படம் முதல் 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது.
    • எதிர்மறை விமர்சனங்களால் கூலி படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது. தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடி வசூலை குவித்த முதல் படம் என்ற சாதனையை கூலி படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது. மொத்தத்தில் இப்படம் உலக அளவில் 518 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.500 கோடி வசூலை மட்டுமே குவித்து ஏமாற்றம் தந்தது.

    இந்நிலையில், கூலி படம் நன்றாக தான் இருந்தது என்று சமீபத்திய பேட்டியில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்தார்.

    அந்த நேர்காணலில் பேசிய அஸ்வின், "கூலி படம் நன்றாக இல்லை என்ற கருத்து அதிகப்படியாக வந்தது. அந்தப் படம் ஓடிடியில் வந்த பின்பு நான் பார்த்தேன். என்னை பொறுத்தவரை ஒரு படத்தை முழுவதுமாக ஒரே அமர்வில் பார்க்க முடிகிறதா என பார்ப்பேன். என்னால் 'கூலி' படத்தை ஒரே அமர்வில் பார்க்க முடிந்தது.

    அதனை பார்த்து முடித்த பின் ஒரே ஒரு கேள்வி தான் என்னை நானே கேட்டுக் கொண்டேன். 'இணையத்தில் வரும் விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிவிட்டேனா?'. ஒரு விமர்சகராக அந்தப் படத்தில் 10 குறைகள் கூட கண்டுபிடிக்கலாம். ஆனால் இவர்கள் சொன்ன அளவு அந்தப் படம் மோசமில்லை" என்று தெரிவித்தார்.

    • 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
    • ஜடேஜாவிற்கு மாற்றாக பிரசாந்த் வீர் இருப்பர் என்று சி.எஸ்.கே அணி எதிர்பார்க்கிறது

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர். இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், பிரசாந்த் வீர் என்ற UNCAPPED ஆல் ரவுண்டர் வீரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் போனார், இவரின் ஆரம்ப விலை ரூ.30 லட்சம் ஆகும். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன UNCAPPED வீரர் என்ற சாதனையை பிரசாந்த் வீர் படைத்தார். ஜடேஜாவிற்கு மாற்றாக பிரசாந்த் வீர் இருப்பர் என்று சி.எஸ்.கே அணி எதிர்பார்த்து இந்த விலையை கொடுத்துள்ளது. 

    அடுத்ததாக ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா (அன்கேப்ட் வீரர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரையும் சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன 2 UNCAPPED வீரர்களையும் சி.எஸ்.கே அணி வாங்கியுள்ளது. 

    • 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
    • பதிரனாவை 18 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி.

    அபுதாபி:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.

    இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான ஆகிப் நபி தர்ரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

    ×