search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரவுடி கும்பல்கள் தான் ஜெயிலில் இருந்து இயங்குவார்கள்- பா.ஜனதா பதிலடி
    X

    ரவுடி கும்பல்கள் தான் ஜெயிலில் இருந்து இயங்குவார்கள்- பா.ஜனதா பதிலடி

    • முதல்-மந்திரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
    • ஆம் ஆத்மி அரசு மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். முதல்-மந்திரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    அவர் நேற்று மாலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் தனி நீதிபதி காவேரி பலேகா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 28-ந்தேதி வரை 6 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து அவர் அமலாக்கத்துறை காவலில் ஜெயிலில் வைக்கப்பட்டு உள்ளார்.

    கைது நடவடிக்கையை தொடர்ந்து முதல்-மந்திரி பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்துள்ள அவர் முதல்-மந்திரி பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்யமாட்டேன். தேவைப்பட்டால் டெல்லி அரசை சிறையில் இருந்து கொண்டே நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு பாரதிய ஜனதா கட்சி பதிலடி கொடுத்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் எம்.பி. மனோஜ் திவாரி கூறியதாவது:-

    ஜெயிலில் இருந்து கொண்டு ரவுடி கும்பல்கள் தான் இயங்குவதை பார்த்து இருக்கிறோம். அரசை அல்ல. டெல்லியில் அரசை தொடர்ந்து நடத்துவதற்கான தார்மீக அடிப்படையை ஆம் ஆத்மி கட்சி இழந்து விட்டது. இது நீதிமன்ற நடவடிக்கை. ஆம்ஆத்மி அரசு மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். மந்திரிகள் கோபால்ராய், அதிஷி ஆகியோர் முதல்-மந்திரியாக ஆசைப்படுகிறார்கள். அவர்கள் உள்நோக்கத்துடன் உள்ளனர்.


    இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவாலை யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைதான அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொது நல வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.

    அமலாக்கத்துறையை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அவருக்கு சம்மன் அனுப்பி சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். தற்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து உள்ளது. இதற்காக அவர்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையில் டெல்லியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியாவை தாக்கியதாக கூறப்படும் போலீஸ் உதவி ஆணையர் ஏ.கே.சிங். தன்னையும் மோசமாக நடத்தியதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.

    Next Story
    ×