என் மலர்tooltip icon

    இந்தியா

    • லின்க்டுஇன் இன்னும் தயாராக இல்லை போலிருக்கிறது.
    • சிறந்த பொருட்களை கண்டறிய உதவி செய்கிறோம்.

    தொழில்முறை உலகில் தொடர்புகளை வளர்க்க, வேலை வாய்ப்புகளை தேட மற்றும் தொழில் சார்ந்த விவாதங்களில் ஈடுபட லின்க்டுஇன் (LinkedIn) தளத்தை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இப்போது, அந்த தளத்தில் மனிதர்கள் மட்டுமல்ல, ஒரு நான்கு கால் நண்பரும் கவனம் ஈர்த்துள்ளார்.

    பெங்களூருவைச் சேர்ந்த "ட்ரோகோ" என்ற காக்கர் ஸ்பேனியல் நாய், தனது தனித்துவமான லின்க்டுஇன் புரொஃபைல் மூலம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த புரொஃபைலை உருவாக்கியவர், "thePack.in" என்ற செல்லப்பிராணி பராமரிப்பு கல்வி தளத்தின் நிறுவனர் ஷோபித் மொஹாந்தி.

    ட்ரோகோவின் லின்க்டுஇன் பயோவில், "Top dog at thePack.in" என்று பெருமையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமான தொழில்முறை வார்த்தைகள் இல்லாமல், மகிழ்ச்சியான புகைப்படமும் விளையாட்டுத்தனமான விளக்கங்களும் இந்த புரொஃபைலில் இடம்பெற்றுள்ளன.

    இந்த நிலையில், ட்ரோகோவின் புரொஃபைல் நேற்று முதல் லின்க்டுஇன் தளத்தில் ஷேடோ பேன் (shadow-ban) செய்யப்பட்டுள்ளதாக ஷோபித் மொஹாந்தி தெரிவித்துள்ளார். "தொழில்முறை நாய்களை தங்களின் தளத்தில் ஏற்க லின்க்டுஇன் இன்னும் தயாராக இல்லை போலிருக்கிறது," என்று அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

    மேலும், thePack.in தொடங்குவதற்கு ட்ரோகோவே தனது ஊக்கமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். "2020ஆம் ஆண்டு, பலர் நாய்களை வளர்க்க தொடங்கிய காலகட்டத்தில், பயிற்சியாளர்கள், நடத்தை நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள், ஊட்டச்சத்து ஆலோசகர்கள் போன்றோரிடம் அணுகல் இல்லாததால் பலர் சிரமப்பட்டனர். அந்த குறையை சரி செய்யவே thePack தொடங்கப்பட்டது," என்றார்.

    இந்த சம்பவம், பெங்களூருவில் வளர்ந்து வரும் செல்லப்பிராணி நட்பு கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுகிறது. பல நிறுவனங்கள், பணியிடங்களில் செல்லப்பிராணிகளை அனுமதித்து, மனஅழுத்தத்தை குறைத்து, நட்பு சூழலை உருவாக்கி வருகின்றன. இதற்கிடையில், ஐதராபாத் நகரைச்சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம், டென்பர் என்ற கோல்டன் ரிட்ரீவர் (Golden Retriever) நாயை தனது தலைமை மகிழ்ச்சி அலுவலர் (Chief Happiness Officer-CHO) ஆக நியமித்த சம்பவமும் சமீபத்தில் கவனம் பெற்றது.

    • பம்பை ஆற்றில் பக்தர்கள் விட்டுச் சென்ற துணிகள் மட்டும், டன் கணக்கில் எடுக்கப்பட்டன.
    • சன்னிதான பகுதிகள் மட்டுமின்றி நிலக்கல், பம்பா, அங்கிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அட்டத்தோடு குடியிருப்பு பகுதியிலும் கடும் ஈக்கள் தொல்லை இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை வைபவத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு வைபவத்திலும் லட்சக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    மகரவிளக்கு பூஜை வைபவம் முடிந்தபிறகு ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படும். அதன்பிறகு கோவில் மேல்சாந்திகள் மற்றும் தேவசம் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கோவிலை விட்டு வந்துவிடுவார்கள். அவர்கள் சன்னிதானம் அருகே உள்ள விடுதியில் தங்கியிருப்பர்.

    அதேபோன்று இந்த ஆண்டும் மகரவிளக்கு வைபவம் முடிந்து கோவில் நடை சாத்தப்பட்ட பிறகு மேல்சாந்திகள், அவர்களது உதவியாளர்கள், தேவசம் ஊழியர்கள், பாதுகாப்பு காவலர்கள், போலீசார், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வனத்துறை காவலர்கள் என சுமார் 65 பேர் சன்னிதானம் அருகே உள்ள விடுதிகளில் தங்கியிருக்கின்றனர்.

    அவர்கள் ஈக்கள் தொல்லையால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கழிவுகள் தேக்கம் காரணமாக ஈக்கள் அதிகளவில் பெருகி விட்டதால், விடுதியில் தங்கியிருப்பவர்கள் தொல்லையை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் ஈக்கள் தொல்லையால் உணவு சாப்பிட முடியாமலும், தூங்க முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சபரிமலையில் புனித யாத்திரை காலத்தின்போது சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பக்தர்கள் திரளக்கூடிய அனைத்து இடங்களிலும் தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். இருந்தபோதிலும் பல இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந்து கிடக்கும்.

    அவற்றை அகற்றும் பணி யாத்திரை காலம் முடிந்தபிறகு தூய்மை படை மூலம் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டும் தூய்மை படை மூலம் சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேங்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டன.

    பம்பை ஆற்றில் பக்தர்கள் விட்டுச் சென்ற துணிகள் மட்டும், டன் கணக்கில் எடுக்கப்பட்டன. இருந்தபோதிலும் பல இடங்களில் கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஈக்கள் அதிகமாக பெருகிவிட்டது. அவை எல்லா இடங்களிலும் மொய்த்தபடி இருக்கிறது.

    இரவு, பகல் என்று இல்லாமல் அனைத்து நேரங்களிலும் ஈக்கள் அனைத்து இடங்களிலும் மொய்த்தபடி இருப்பதால் சன்னிதான விடுதியில் தங்கியிருப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். உணவு சாப்பிடக்கூட சிறிய அளவிலான மின் விசிறியை கையில் வைத்துக் கொண்டு இருக்க வேண்டியிருக்கிறது.

    மேலும் தபால் அலுவலகம், துணை மின் நிலையம், நீர்ப்பாசன அலுவலகம், பி.எஸ்.என்.எல். மற்றும் வனத்துறை அலுவலகங்களில் தங்கியிருக்கக்கூடிய ஊழியர்களும் இதே பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.

    சன்னிதான பகுதிகள் மட்டுமின்றி நிலக்கல், பம்பா, அங்கிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அட்டத்தோடு குடியிருப்பு பகுதியிலும் கடும் ஈக்கள் தொல்லை இருக்கிறது.

    சபரிமலை, பம்பா மற்றும் நிலக்கல் பகுதிகளில் இந்த ஆண்டு கோடை மழை இன்னும் பெய்யவில்லை. கோடை மழை பெய்தால் ஈக்கள் தொல்லை குறையும் உன்று உள்ளூர்வாசிகளும், தேவசம்போர்டு ஊழியர்களும் கூறுகின்றனர்.

    • மாயமான குழந்தைகளில் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 9 பேர் ஆவர்.
    • 8 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில், கடந்த மாதம் 13 குழந்தைகள் மாயமானதாக அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் முதல் 27-ந்தேதி வரை 807 பேர் மாயமாகி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போனவர்களை தேடி வந்தனர். இதில் 235 பேரை கண்டுபிடித்துள்ளனர். 572 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்த காலகட்டத்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் 27 பேர் காணாமல் போய் உள்ளனர். அதே நேரத்தில் காணாமல் போனவர்களில் தினமும் 9 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.

    27 நாட்களில் 191 குழந்தைகள் மாயமாகி உள்ளனர். அவர்களில் 48 குழந்தைகள் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளனர். 137 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டுபிடிக்கப்படாதவர்களில் 120 பேர் சிறுமிகள் ஆவர்.

    பெரியவர்களில் 616 பேர் மாயமானதாக தகவல் வெளியானது. அவர்களில் 90 ஆண்கள் மற்றும் 91 பெண்கள் என 181 பேரை போலீசார் மீட்டுள்ளனர். 435 பேர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.

    மாயமான குழந்தைகளில் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 9 பேர் ஆவர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 6 பேரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2025-ம் ஆண்டு இதே வயதுள்ள குழந்தைகள் 368 பேர் மாயமானார்கள். அவர்களில் 149 பேர் மீட்கப்பட்டனர். 219 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    8 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில், கடந்த மாதம் 13 குழந்தைகள் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. இவர்களில் 3 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. 12 முதல் 18 வயதுடைய இளம் பருவத்தினர் 169 பேர் கடந்த மாதம் மாயமானார்கள். அவர்களில் 48 பேர் கண்டுபிடிக்கப்பட்ட னர். 121 பேரை இன்னும் காணவில்லை.

    டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கானோர் மாயமானதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் இன்னும் பலர் கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் டெல்லியில் 5,559 குழந்தைகள் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 695 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை டெல்லியில் 18 வயதுக்குட்பட்ட மொத்தம் 60 ஆயிரத்து 694 பேர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 53,763 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 6,931 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. இது சுமார் 11 சதவீதம் ஆகும்.

    காணாமல் போனவர்கள் பற்றி போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளில் 12 வயது முதல் 18 வயது வரையிலான பெண்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் கடத்தப்பட்டு இருக்கலாம், அதன் மூலம் ஆபத்தில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    • கிராமத்தின் அருகே உள்ள குளத்தின் கரையின் டிராக்டர் வந்து கொண்டு இருந்தது
    • டிராக்டரில் வந்த 20 பெண்களும் தண்ணீரில் மூழ்கினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் மல்லாபூர் அடுத்த மொகிலி பேட்டாவை சேர்ந்த 20 பெண்கள் மஞ்சள் அறுவடை வேலைக்காக அருகில் உள்ள கிராமத்திற்கு டிராக்டரில் சென்றனர்.

    நேற்று மாலை வேலை முடிந்து மீண்டும் டிராக்டரில் சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    கிராமத்தின் அருகே உள்ள குளத்தின் கரையின் டிராக்டர் வந்து கொண்டு இருந்தது. குறுகிய வளைவில் திரும்பும்போது டிராக்டர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்தது.

    டிராக்டரில் வந்த 20 பெண்களும் தண்ணீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கிய பெண்களை மீட்டனர். இதில் தண்ணீரில் மூழ்கி சம்பங்கி சாய்ம்மா (வயது 35),லலிதா (42 ), வைஷ்ணவி (13), பெட்டி ரெட்டி கங்கு (32) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    விவசாய வேலைக்குச் சென்று ஒரே ஊரை சேர்ந்த 4 பெண்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து மல்லாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர்.
    • நெய் விற்பனை மோசடி தொடர்பாக உதவி அர்ச்சகர்கள் உள்பட 33 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நெய் விற்பனையில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது, நெய் விற்பனையில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 100 கிராம் அளவுள்ள 13 ஆயிரத்து 679 பாக்கெட் நெய் விற்பனை செய்யப்பட்டு திருவிதாங்கூர் தேவஸ்தான கருவூலத்திற்கு வர வேண்டிய ரூ.13 லட்சத்து 67 ஆயிரத்து 900 மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. நெய் விற்பனை மோசடி தொடர்பாக உதவி அர்ச்சகர்கள் உள்பட 33 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதன் தொடர்ச்சியாக நெய் விற்பனை பொறுப்பில் இருந்த அதிகாரி சுனில்குமார் போற்றியை திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்திருந்தது.

    இந்த நிலையில் கேரள ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று சுனில்குமார் போற்றியை கைது செய்தனர்.

    • நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்து சர்ச்சையில் சிக்கியது.
    • வரும் நாட்களில் தனது சேவையை குறைத்து கொள்வதாக விமான இயக்குனரகத்திடம் இண்டிகோ தெரிவித்திருந்தது.

    நாட்டின் முன்னனி விமான சேவை நிறுவனமாக இண்டிகோ உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் விமானிகள் பற்றாக்குறை காரணமாக உள்ளூர், வெளிநாடுகளுக்கு இயக்கப்படவிருந்த நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்து சர்ச்சையில் சிக்கியது.

    இதனால் வரும் நாட்களில் தனது சேவையை குறைத்து கொள்வதாக விமான இயக்குனரகத்திடம் இண்டிகோ தெரிவித்திருந்தது.

    அதன் ஒரு பகுதியாக தொலைத்தூர சேவைகளை ரத்து செய்து இண்டிகோ அறிவித்துள்ளது. டெல்லி-லண்டன், டெல்லி-மான்செஸ்டர் உள்ளிட்ட விமான சேவைகளை குறைத்து கொள்வதாகவும் டெல்லி-கோபன்ஹேகன் விமான சேவையை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.

    • நக்சல் பிரச்சனை 1968-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.
    • இந்தப் பிரச்சனை பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது.

    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:

    இடதுசாரி பயங்கரவாதம் அல்லது இந்தியாவில் பொதுவாகக் குறிப்பிடப்படும் நக்சல் பிரச்சனை 1968-ம் ஆண்டு முதல் இருந்து வருகின்றது. இதுகுறித்த தேசியக் கொள்கை இல்லாததால் இது பல தசாப்தங்களாக நீடித்து வந்தது.

    2026-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியா நக்சலிசத்தில் இருந்து விடுபடும்.

    கடந்த 2018-ம் ஆண்டு பயங்கரவாதத்தால் 126 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. 2025 டிசம்பரில் அவை 8 மாவட்டங்களாகக் குறைந்துள்ளன.

    பிரதமர் மோடி அரசின் பூஜ்ய சகிப்புத் தன்மை கொள்கை மற்றும் தலைமையின் கீழ் நக்சலிசம் விரைவில் ஒழிக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

    • இதுபோன்ற கடைசி மாநாடு 1999 இல் நடைபெற்றது.
    • தேசிய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இடையே நிறுவன ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு மாநாடு நடத்தப்பட உள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி 24 அன்று டெல்லி பாரத் மண்டபத்தில் மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாட்டை நடத்த உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த தேசிய மாநாட்டில் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளும் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

    இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் ஆணையர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற கடைசி மாநாடு 1999 இல் நடைபெற்றது.

    தற்போது சிறப்பு தீவிர சீர்திருத்த பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தேசிய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இடையே நிறுவன ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • காத்மாண்டில் இருந்து இஸ்தான்புல்லுக்கு விமானம் சென்று கொண்டிருந்தது.
    • விமானம் கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தின் வலது என்ஜினில் தீப்பிடித்ததால், விமானி அபாய எச்சரிக்கை விடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்கியதால் பயணிகள் உயிர் தப்பினர். நேபாளம் தலைநகர் காத்மாண்டில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு துருக்கி ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது.

    திடீரென விமானத்தின் வலது என்ஜின் தீப்பிடித்து எரிவதாக விமானி அறிவித்தார். அதனைத்தொடர்ந்து விமானத்தில் இருந்து PAN PAN என சமிக்ஞை அனுப்பப்பட்டது. இதனால் விமானத்தை கொல்கத்தாவில் இறக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விமானம் கொல்கத்தாவில் பத்திரகமாக தரையிறங்கியது. விமானம் தரையிறங்குவதற்கு முன் முழு எமர்ஜென்சி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்து. இதில் எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை.

    • இன்று முதல் வரும் 24ம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
    • மே 24ம் தேதி முதல்நிலைத் தேர்வும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 21ம் தேதி முதன்மைத் தேர்வும் நடக்க உள்ளது

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2026-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 933 பணியிடங்களுக்கான தேர்வுக்கு இன்று முதல் வரும் 24ம் தேதி வரை upsconline.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. 

    விண்ணப்ப அறிவிப்பு வெளியீட்டுடன், 2026-ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு முறை மற்றும் இதர விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. யுபிஎஸ்சி தேர்வு அட்டவணைப்படி, முதல்கட்ட தேர்வு மே.24ஆம் தேதியும், முதன்மைத் தேர்வு (Mains) ஆகஸ்ட் 21-ம் தேதியும் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து நேர்காணல் நடைபெறும்.  

    கடந்த ஆண்டு, 979 காலியிடங்களை ஆணையம் வழங்கியது . 2024 ஆம் ஆண்டில், 1,105 காலியிடங்கள் நிரப்பப்பட்டன. மொத்த காலியிடங்களில், 33 காலியிடங்கள், அடிப்படை மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஏழு காலியிடங்கள் கண்பார்வையற்றோர் மற்றும் குறைந்த பார்வைத்திறன் உடையோர்க்கும், 11 காலியிடங்கள் காது கேளாதோர் மற்றும் குறைவான கேட்கும் திறன் உடையோர்க்கும், இயக்கக் குறைபாடு (Locomotor disability) உள்ளவர்களுக்கு எட்டு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; இதில் பெருமூளை வாதம், தொழுநோய் குணமானவர்கள், உயரம் குறைந்தவர்கள், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தசைச் சிதைவு நோய் உள்ளவர்களும் அடங்குவர்.  இன்னும் பிற குறைபாடு உள்ளவர்களுக்கு ஏழு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

    • வருகிற பிப்ரவரி 7 மற்றும் 8-ந்தேதி மலேசியாவில் சுற்றுப் பயணம் செய்கிறார்.
    • தொழில் மற்றும் வணிக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வருகிற சனிக்கிழமை மலேசியா செல்கிறார். இந்த சுற்றுப் பயணத்தின்போது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இந்த பயணத்தின்போது மலேசிய வாழ் இந்தியர்களுடன் உரையாடுகிறார்கள். அதேபோல் தொழில் மற்றும் வணிக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    இந்த பயணத்தின்போது இந்தியா- மலேசியா சிஇஓ மன்றம் நிகழ்ச்சியும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

    வரலாற்று, நாகரிக மற்றும் கலாச்சாரத் தொடர்புகளின் அடிப்படையில் இந்தியாவும் மலேசியாவும் நீண்டகால நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகின் 3-வது பெரிய நாடாக மலேசியாவில் 2.9 மில்லியன் பேர் கொண்ட இந்திய வம்சாவளியினர் இருப்பதும் இந்த உறவை மேலும் வலுப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

    • ஆளுநர் அஜய் பல்லா முதலமைச்சர் கேம்சந்த் சிங்கிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
    • மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்ட நிலையில் பதவியேற்பு.

    மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்றுக் கொண்டார்.

    இம்பாலில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் அஜய் பல்லா முதலமைச்சர் கேம்சந்த் சிங்கிற்கு பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

    மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்ட நிலையில் முதல்வராக கேம்சந்த் சிங் பதவியேற்றுள்ளார்.

    ×