search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வைஷ்ணவி தேவி கோவில்
    X
    வைஷ்ணவி தேவி கோவில்

    வைஷ்ணவி தேவி கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை ரத்து

    மோசமான வானிலை காரணமாக அங்குள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சாலை வழியே மட்டும் யாத்திரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

    மேலும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காஷ்மீரை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து 270 கி.மீட்டர் நீளமுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை நேற்று மூடப்பட்டது. இதன் காரணமாக அந்த நெடுஞ்சாலையில் பல இடங்களில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. சந்திரகூட் மற்றும் ரம்சு ஆகிய இடங்களுக்கு இடையே நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நிற்கின்றன.

    நிலச்சரிவால் சாலைகளில் விழுந்துள்ள கற்களையும், மண்ணையும் அகற்றி போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    மேலும் மோசமான வானிலை காரணமாக அங்குள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சாலை வழியே மட்டும் யாத்திரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நேற்று அதிகாலை 5 மணியளவில் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் புதிய பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆனாலும் உடனடியாக இடிபாடுகள் அகற்றப்பட்டு பக்தர்களுக்கு அந்த பாதை திறந்துவிடப்பட்டுள்ளது.

    வைஷ்ணவிதேவி கோவிலுக்கு அருகே உள்ள பைரோன்கட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக தரையில் ஒரு அடி அளவுக்கு பனி படர்ந்துள்ளது. மேலும் சிம்லாவில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் முழுவதும் பனி படர்ந்து காணப்படுகிறது.
    Next Story
    ×