search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜன்தன் வங்கி கணக்கு
    X
    ஜன்தன் வங்கி கணக்கு

    ஜன்தன் வங்கி கணக்கு எண்ணிக்கை 44 கோடியாக அதிகரிப்பு - மத்திய அரசு

    பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் வங்கி கணக்கு தொடங்கி பராமரித்து வருகின்றனர்.
    புதுடெல்லி:

    நாட்டு மக்கள் அனைவரும் வங்கி சேவையை பயன்படுத்தும் வகையில் வங்கி கணக்குகள் தொடங்கும் திட்டம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஆகஸ்டு 28-ம் தேதி இது தொடங்கப்பட்டது.

    பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் வங்கி கணக்கு தொடங்கி பராமரித்து வருகின்றனர். தொடர்ந்து புதிய கணக்குகள் தொடங்கப்பட்டு வருவதால் இந்த கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், இந்த மாதம் வரை மொத்தம் 44 கோடி வங்கி கணக்குகள் இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டு உள்ளது என பொருளாதார விவகாரங்கள் துறை ஆலோசகர் மனிஷா சென்சர்மா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×