search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    எல்லை பாதுகாப்புப்படை அதிகார வரம்பு விவகாரம்: மம்தா பானர்ஜி சொல்வது என்ன?

    எல்லை பாதுகாப்புப்படை அதிகார வரம்பு பிரச்சினையில் மத்திய அரசை பஞ்சாப் மாநில முதல்வர் கடுமையாக எதிர்க்கும் நிலையில், மம்தா பானர்ஜி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
    இந்தியா அண்டை நாட்டுடன் உள்ள எல்லைகளில் பாதுகாப்புப்படையினரை நிறுத்தியுள்ளது. பஞ்சாப், மேற்கு வங்காளம், அசாம் மாநில எல்லைகளில் 15 கி.மீட்டர் வரை எல்லை பாதுகாப்புப்படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 15 கி.மீட்டர் எலைக்குள் கைது, சோதனை, பறிமுதல் போன்ற நடவடிக்கைகளில் எல்லைப் பாதுகாப்புப்படையினர் ஈடுபட அனுமதி உண்டு.

    தற்போது 15 கி.மீட்டர் என்பதை 50 கி.மீட்டர் என மத்திய உள்துறை அமைச்சகம் விரிவாக்கம் செய்துள்ளது. இதன்மூலம் எல்லைப் பாதுகாப்புப்படையினரின் அதிகாரம் மூன்று மாநிலங்களில் அதிகமாகிறது. இதனால் அம்மாநிலங்களில் காவல்துறையின் உரிமை பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இதுவரை கருத்து கூறாமல் இருந்தார். இந்த நிலையில் மம்தா பானர்ஜி எல்லை பாதுகாப்புப்படை அதிகார வரம்பு குறித்து கூறியதாவது:-

    நான் எல்லை பாதுகாப்புப்படைக்கு மரியாதை கொடுக்கிறேன். ஆனால், பாதுகாப்பு என்ற பெயரில் வேண்டுமென்றே மக்களை துன்புறுத்த முடியாது. எல்லை பாதுகாப்புப்படையின் அதிகார வரம்பு குறித்து ஏற்கனவே நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். எங்களுடைய எல்லை பகுதிகள் முழுவதுமாக அமைதியாக உள்ளது. எங்களுக்கு அவர்களுடைய ஈடுபாடு தேவையில்லை’’ என்றார்.
    Next Story
    ×