search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை
    X
    குழந்தை

    100 குழந்தைகள் உயிரிழப்பிற்கு சீன நாட்டு மருத்துவ உபகரணங்கள் காரணமா?

    ராஜஸ்தான் குழந்தைகள் மருத்துவமனையில் ரத்த அழுத்தம், சுவாசம் மற்றும் இதய துடிப்பு பற்றி அளவிடுவதற்கு தரமற்ற சீன உபகரணங்களை பயன்படுத்தினார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஜே.கே.லோன் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. அதன் கிளை ஆஸ்பத்திரி கோட்டா நகரில் இருக்கிறது. அங்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பிறந்த குழந்தைகள் இறந்து உள்ளனர். சீன நாட்டு மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்தும்படி, கூடுதல் தலைமை செயலாளருக்கு, சுகாதாரத்துறை மந்திரி ரகு சர்மா உத்தரவிட்டார்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் குழந்தைகள்

    “ரத்த அழுத்தம், சுவாசம் மற்றும் இதய துடிப்பு பற்றி அளவிடுவதற்கு தரமற்ற சீன உபகரணங்களை பயன்படுத்தினார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தபின், மேல் நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்” என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×