என் மலர்

  செய்திகள்

  ஜின்னா புகைப்பட விவகாரம் : அலிகார் பல்கலைக்கழக வளாகத்தில் இணைய வசதி துண்டிப்பு
  X

  ஜின்னா புகைப்பட விவகாரம் : அலிகார் பல்கலைக்கழக வளாகத்தில் இணைய வசதி துண்டிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அலிகார் பல்கலைக்கழகத்தில் முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் தொடர்பாக சர்ச்சை மேலோங்கி வரும் நிலையில் அசம்பாவிதத்தை தவிர்க்க பல்கலைக்கழக வளாகத்தில் இணையதள வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. #AMU #Jinnahportrait #Internetsuspended
  லக்னோ:

  உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழகத்தில் பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னா புகைப்படம் இடம்பெற்றிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  அலிகார் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக ஜின்னா புகைப்படம் இடம்பெற்றுள்ளது எதற்காக? என அலிகார் தொகுதி பா.ஜ.க. எம்.பி. கேள்வி எழுப்பிய பின்னர் இந்த விவகாரம் பூதாகரமானது. 

  ஜின்னாவின் புகைப்படத்தை நீக்க வலியுறுத்தி இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

  இதைத்தொடர்ந்து அலிகார் பல்கலைக்கழகத்தில் இருந்து ஜின்னா புகைப்படத்தை நீக்கக்கோரி இந்து அமைப்புகள் பேரணி நடத்தினர் அப்போது வெடித்த மோதலில் 28 மாணவர்கள் மற்றும் 13 போலீசார் காயம் அடைந்தனர். 

  இந்த விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு தேவையில்லை மாணவர்களுடன் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் வலியுறுத்தி வருகின்னர்.

  இந்த விவகாரம் தொடர்பாக சமூக வளைத்தளங்களில் தொடர்ந்து எதிர்மறைக் கருத்துக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருவதால் இந்து-இஸ்லாமியர்களிடையே சமூக மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

  எனவே, இவ்விவகாரத்தால் எழும் அசம்பாவிதங்களை தவிர்கும் வகையில் அலிகார் பல்கலைக்கழக வளாகத்தில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

  வரும் 5-ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை இணையதள வசதி துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews  #AMU #Jinnahportrait #Internetsuspended
  Next Story
  ×