search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி துப்பாக்கிச் சூடு - இந்திய வீரர் பலி
    X

    காஷ்மீர்: பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி துப்பாக்கிச் சூடு - இந்திய வீரர் பலி

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள அர்னியா எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய பாதுகாப்புப் படையை சேர்ந்த கான்ஸ்டபிள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் அர்னியா இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது இன்று அதிகாலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டர் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் ஜம்முவில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தொடர்ந்து அங்கு நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் இந்திய பாதுகாப்புப் படையை சேர்ந்த கான்ஸ்டபிள் ப்ரிஜேந்திர பகதூர் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், பொதுமக்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தினர்.

    முன்னதாக, பூஞ்ச் செக்டாரில்  இந்திய முகாம்களின்மீது நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் வீரர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 5 நாட்களில் இந்திய எல்லைப்பகுதியின் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ள 6 வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×