search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க ரூ.25 சேவைக் கட்டணமா?: எஸ்.பி.ஐ. மறுப்பு
    X

    ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க ரூ.25 சேவைக் கட்டணமா?: எஸ்.பி.ஐ. மறுப்பு

    ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க ஒவ்வொரு முறைக்கும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானது என்று எஸ்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, பெருநகரங்களில் இருப்பவர்கள் ரூ.5,000 வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 

    அந்த அதிர்ச்சி குறைவதற்குள், ஜூன் மாதம் முதல் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்க ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று இன்று அறிவிப்புகள் வெளியானது. மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பிற ஏடிஎம்-ல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

    ஆனால், ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானது என்று எஸ்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து எஸ்.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ரூ.25 சேவைக் கட்டணம் வசூலிப்பு என்பது மொபைல் வாலட்டுக்கு மட்டும் தான் என்றனர். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏடிஎம் கட்டணங்கள் ரிசர்வ் வங்கியால் நிர்ணயம் செய்யப்படுகிறது. இது அனைத்து வங்கிகளுக்கு பொதுவான விதிமுறையாகும். அதன்படி தற்போதைக்கு மாதத்திற்கு 3 முறை கட்டணமில்லாமல் மற்ற வங்கி ஏடிஎம்-களை பயன்படுத்தலாம். அதேபோல், சொந்த ஏடிஎம்-களில் 5 முறை பயன்படுத்தலாம். 
    Next Story
    ×