என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகாவில் கல்குவாரி குட்டையில் மூழ்கி தாய்-மகன் பலி
Byமாலை மலர்26 April 2017 9:42 AM IST (Updated: 26 April 2017 9:42 AM IST)
கர்நாடகாவில் கல்குவாரி குட்டையில் மூழ்கி தாய், மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி மணிப்பால் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே மணிப்பால் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட படுஅளவூர் பகுதியை சேர்ந்தவர் யமுனப்பா, கூலி தொழிலாளி. இவரது மனைவி நீலம்மா(வயது 30). இவர்களுடைய மகன் அனுமந்தப்பா(5).
நேற்று மாலையில் நீலம்மா அந்த பகுதியில் உள்ள ஒரு கல்குவாரி குட்டையில் துணி துவைப்பதற்காக சென்றார். அப்போது மகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து விடுவான் என கருதி அனுமந்தப்பாவை தன்னுடன் அழைத்து சென்றார்.
பின்னர் நீலம்மா கல்குவாரி குட்டையின் கரை ஓரத்தில் இருந்து ஒவ்வொரு துணிகளாக துவைத்துக் கொண்டி ருந்தார். அந்த சமயத்தில் சிறுவன் அனுமந்தப்பா கல் குவாரி குட்டையின் கரையில் அமர்ந்து இருந்தவாறு கால்களை மட்டும் தண்ணீரில் உரசிக் கொண்டு இருந்தான். பின்னர் சற்று நேரம் கழித்து குட்டை நீரில் இறங்கி விளையாட ஆரம்பித்தான்.
இதனை கண்டதும் தாய் நீலம்மா, உடனே கரைக்கு திரும்பி வருமாறு கூறி அழைத்தார். ஆனால் சிறுவன் வர அடம்பிடித்து தண்ணீரில் சந்தோசமாக விளையாடி கொண்டிருந்தான். பின்னர் தாய் ஆழமான பகுதிக்கு சென்று விடாதே, எனது அருகில் நின்று கொண்டு தண்ணீரில் விளையாடு என கூறி மீண்டும் துணி துவைக்க தொடங்கினார்.
பொதுவாக கல்குவாரி குட்டையில் தண்ணீர் ஒன்று போல் நிரப்பாக இருப்பது போல் தெரியும். கல்குவாரி குட்டையில் எங்கே? ஆழமாக இருக்கிறது. எங்கே? ஆழம் இல்லாமல் இருக்கிறது என்பது தெரியாது.
இதனால் நீரில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் அனுமந்தப்பா திடீரென ஆழமான பகுதியில் சிக்கி மூழ்க தொடங்கினான்.
இதனை பார்த்து பதறி துடித்த தாய் நீலம்பா, உடனடியாக மகனை காப்பாற்ற முயன்றார். குட்டைக்குள் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்று மகனை காப்பாற்ற முயன்ற போது, அவரும் ஆழமான பகுதியில் சிக்கி விட்டார். இதனால் தாயும், மகனும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இதையடுத்து அப்பகுதி மீனவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் குட்டையில் ஒவ்வொரு இடங்களாக சல்லடை போட்டு தேடினார்கள். பெரிய கல்குவாரி குட்டை என்பதால் சில மணி நேர தேடுதலுக்கு பிறகு தாய், மகன் உடலையும் கண்டுபிடித்து மீட்டுகரைக்கு கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி மணிப்பால் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×