search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானத்தில் அடாவடியில் ஈடுபட்டால் ரூ.15 லட்சம் அபராதம்: ஏர் இந்தியா அதிரடி
    X

    விமானத்தில் அடாவடியில் ஈடுபட்டால் ரூ.15 லட்சம் அபராதம்: ஏர் இந்தியா அதிரடி

    விமானத்தில் அத்துமீறி நடந்துகொள்ளும் பயணிகள் மீது சட்டரீதியான நடவடிக்கையுடன் ரூ.15 லட்சம் வரை அபராதம் விதிக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அத்துமீறலில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையை எடுக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

    அதன்படி, பயணிகள் தகராறு செய்வதால் விமானம் காலதாமதமானால் சம்பந்தப்பட்ட பயணிக்கு அபராதம் விதிக்கப்படும். பயணியின் தகராறு காரணமாக விமான சேவையில் ஒரு மணிநேரம் காலதாமதம் ஏற்பட்டால் ரூ. 5 லட்சமும், ஒரு மணி நேரத்திற்கு மேல் 2 மணி நேரத்திற்குள் காலதாமதம் ஆனால் ரூ. 10 லட்சமும், 2 மணி நேரத்திற்கு மேல் காலதாமதம் ஆனால் 15 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    “எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஏர் இந்தியா ஊழியர்கள் நேரடியாக ஊடகங்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கக் கூடாது. பிரச்சினைகள் தொடர்பாக உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். அத்துமீறும் பயணிகளை சமாளிப்பதற்காக விமான நிலைய மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்” போன்ற அம்சங்களும் புதிய விதிமுறையில் இடம்பெறுகிறது.

    மேலும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டோலா சென், சிவசேனா எம்.பி. கெய்க்வாட், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி ஆகியோரின் செய்கைகளால் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டதையும் ஏர் இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது.
    Next Story
    ×