search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்துத்வா அமைப்புகள் பா.ஜ.க.வுடன் தொடர்பு வைத்துள்ளன: காங்கிரஸ் குற்றச்சாட்டு
    X

    இந்துத்வா அமைப்புகள் பா.ஜ.க.வுடன் தொடர்பு வைத்துள்ளன: காங்கிரஸ் குற்றச்சாட்டு

    ராஜஸ்தானில் நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்துத்வா அமைப்புகள் பா.ஜ.க கட்சியுடன் தொடர்பு வைத்துள்ளதாக குற்றம்சாட்டினர்.
    புது டெல்லி:


    ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நேற்று பசுக்களை ஏற்றிச்சென்ற 5 பேரை வழிமறித்து பசு பாதுகாவலர்கள் தாக்கியதில் பெக்லு கான் என்பவர் மரணமடைந்தார். அவருடன் தாக்கப்பட்ட மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜெய்ப்பூர் சந்தையில் பசுக்களை வாங்கி வருவதாக அரியானா மாநிலத்தை சேர்ந்த பெக்லு கான் மற்றும் அவருடன் வந்தவர்கள் ஆவணங்களை கும்பலிடம் காட்டி உள்ளனர். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத அந்த கும்பல் அவர்களை கொடூரமான முறையில் தாக்கியது.

    நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பிய இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.

    இதுதொடர்பாக மக்களவையில் இன்று ஜீரோ அவரின்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி கேட்டு அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன பேசுகையில் “ராஜஸ்தானை சேர்ந்த 5 நபர்கள் பசுமாடுகளை வாங்கிக்கொண்டு வரும் வழியில் பசு பாதுகாவலர்கள் அவர்களின் வாகனத்தை நிறுத்தி அவர்களை அடித்துள்ளனர். இதில் ஒருவர் மரணமடைந்தார்.

    பசு பாதுகாப்பு என்ற பெயரில் இதுபோல சம்பவங்கள் நடைபெறுவது இது 5-வது முறை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபின் உத்தர பிரதேசத்தில் இதுபோல 3 சம்பவங்களும் அரியானா, குஜராத் மாநிலங்களில் 2 சம்பவங்களும் நடைபெற்றுள்ளன” என்றார்.



    மேலும், சில இந்துத்துவா அமைப்புகள் பா.ஜ.க கட்சியுடன் தொடர்பு வைத்துள்ளன என்றும் அவர் குற்றஞ்சாட்டி அந்த அமைப்புகளின் பெயர்களை குறிப்பிட்டார். (சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உடனடியாக இதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்)

    நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமார், கார்கேவின் இந்த குற்றச்சாட்டு ஆதாரமில்லாதது என தெரிவித்தார்.

    200-க்கும் மேற்பட்டோர் தாக்குதலில் ஈடுபட்டபோதிலும், இதுவரை வெறும் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கார்கே தெரிவித்தார்.
    Next Story
    ×