search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபர் மசூதி இடிப்பு சதித்திட்டத்தில் அத்வானி உள்ளிட்ட 13 பேருக்கும் தொடர்பு: சி.பி.ஐ. வாதம்
    X

    பாபர் மசூதி இடிப்பு சதித்திட்டத்தில் அத்வானி உள்ளிட்ட 13 பேருக்கும் தொடர்பு: சி.பி.ஐ. வாதம்

    பாபர் மசூதியை இடித்த சதித்திட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 13 பேருக்கும் தொடர்பிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று சி.பி.ஐ. வாதிட்டது.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் கூட்டு சதி செய்ததாக சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. ஆனால், அவர்களை விடுதலை செய்து 2001-ல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் உறுதி செய்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோரை விடுவிக்கும்படி வைத்த கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.



    அத்துடன் கூட்டுச்சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அத்வானி உள்ளிட்ட 13 பேர் மீது துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தனர்.



    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அத்வானி உள்ளிட்ட 13 பேருக்கு சதிதிட்டத்தில் தொடர்பு உள்ளது என்று கூறிய சி.பி.ஐ., அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை உயிர்ப்பிக்க வேண்டும் என வாதிட்டது.

    தொழில்நுட்ப காரணமாக அவர்கள் சதித்திட்ட குற்றச்சாட்டை எதிர்கொள்ளவில்லை. எனவே, லக்னோ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×