search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான ராஜேந்திரகுமார்
    X
    கைதான ராஜேந்திரகுமார்

    கேரளாவில் தொழில் அதிபர் - 2 பேர் கொலையில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

    கேரளாவில் தொழில் அதிபர், அவரது மனைவி, மகன் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வட மாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் அருகே பாறபுழா பகுதியை சேர்ந்தவர் தொழில் அதிபர் லாலசன் (வயது 72). இவரது மனைவி பிரசன்னகுமாரி (57), மகன்கள் பிரவீன் (26), விபின் (23).

    லாலசன் அலங்கார தரையோடுகள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஜேந்திரகுமார் (28) என்பவர் அவரது நம்பிக்கையை பெற்ற ஊழியராக இருந்தார். இதனால் அவர்கள் வீட்டிற்கு அவர் அடிக்கடி வந்து செல்வார்.

    இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு தனது வீட்டில் தொழில் அதிபர் லாலசன், அவரது மனைவி பிரசன்னகுமாரி, மகன் பிரவீன் ஆகிய 3 பேரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

    லாலசன் உடலில் 28 இடங்களிலும், பிரசன்ன குமாரி உடலில் 34 இடங்களிலும் அரிவாள் வெட்டு இருந்தது. பிரவீன் உடலில் மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்டு இருந்தார். இளைய மகன் விபின் வெளியூர் சென்று இருந்ததால் அவர் மட்டும் உயிர் தப்பினார்.

    போலீசார் விசாரணையில் வடமாநில வாலிபரான ராஜேந்திரகுமார் 3 பேரையும் கொடூரமாக கொன்று வீட்டில் இருந்த 8 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து ராஜேந்திர குமாரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை முடிந்து கோட்டயம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திர குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    Next Story
    ×