search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்த சவாலையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது: அருண் ஜெட்லி பெருமிதம்
    X

    எந்த சவாலையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது: அருண் ஜெட்லி பெருமிதம்

    எதிரிகளின் எந்த சவாலையும் சந்திக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அருண் ஜெட்லி இன்று குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று காலை ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கும் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. மனோகர் பரிக்கர் கோவா முதல் மந்திரியாக பதவியேற்றதை தொடர்ந்து, அவர் வகித்துவந்த பாதுகாப்புத்துறை அமைச்சகத்தை கூடுதல் பொறுப்பாக ஏற்றுள்ள மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இந்த விவாதத்தின்மீது பதில் அளித்து உரையாற்றினார்.

    நாட்டுக்கு தேவையான ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயார் செய்யப் போவதாக அறிவித்திருந்த மத்திய அரசின் திட்டம் தோல்வியை தழுவியுள்ளதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர், உள்நாட்டில் ஆயுதங்கள் தயாரிக்கும் பணிகள் தன்னிறைவு அளிக்கும் வகையில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.



    மேலும், பா.ஜ.க. தலைமையிலான இந்த அரசு அமைந்த பின்னர் ராக்கெட்டுகள், ரேடார்கள் மற்றும் ஏவுகணைகள் போன்றவறறை வாங்குவதற்காக 2,957.66 கோடி ரூபாய்க்கு 147 புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அருண் ஜெட்லி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள மாட்டோம்.

    எதிரிகளின் எந்த சவாலையும் சந்திக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார்.

    Next Story
    ×