search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவா நம்பிக்கை வாக்கெடுப்பு: மக்கள் சக்தியை மிஞ்சியது பணத்தின் மதிப்பு - திக்விஜய் சிங்
    X

    கோவா நம்பிக்கை வாக்கெடுப்பு: மக்கள் சக்தியை மிஞ்சியது பணத்தின் மதிப்பு - திக்விஜய் சிங்

    கோவா நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் மக்கள் சக்தியை பாஜக-வின் பணத்தின் மதிப்பு மிஞ்சியதாக கோவா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
    பனாஜி:

    கோவாவில் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைக்க அம்மாநில சபாநாயகர் அனுமதி அளித்தார். முன்னதாக கோவா சட்டசபை தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்றுள்ள பா.ஜ.க. ஆட்சியமைக்க முடிவு செய்தது.

    அதையடுத்து, 15 நாட்களில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மனோகர் பாரிக்கரை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பையடுத்து, நேற்று முன்தினம் மனோகர் பாரிக்கர் முதல்மந்திரியாக பதவியேற்றார்.

    இந்நிலையில், மனோகர் பாரிக்கர் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையில் இன்று நடைபெற்றது. அப்போது  22 எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு ஆதரவாகவும், எதிராக 16 எம்.எல்.ஏ-க்களும் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் அவையை புறக்கணித்தார். இதனால், அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கோவா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திக் விஜய் சிங் மக்கள் மக்கள் சக்தியை பணத்தின் மதிப்பு மிஞ்சியது என்றார். கோவா தேர்தலை பொறுத்தவரை, இறுதியில் பணத்தின் சக்தியே வெற்றி பெற்றது என்று கூறினார்.

    கோவா மக்கள் பாஜக-வை தோற்கடித்திருந்தாலும், அதற்கு எதிராக பாஜகவின் பணம் இறுதியில் வெற்றி பெற்றது என்று கூறிய திக்விஜய், இது மிகவும் கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.

    40 தொகுதிகளில் 17 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க தவறியது. மேலும் காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். 
    Next Story
    ×