search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2022-ம் ஆண்டில் விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் பெறுவதே எங்களது இலக்கு: மோடி பேச்சு
    X

    2022-ம் ஆண்டில் விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் பெறுவதே எங்களது இலக்கு: மோடி பேச்சு

    2022-ம் ஆண்டு விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் பெற வேண்டும் என்பதே எங்களது இலக்கு என, பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் 2 கட்ட தேர்தல்கள் மீதம் உள்ளன. நாளை 6-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 7-ம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தற்போது பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மிர்சாபூர் நகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    உத்தர பிரதேச தேர்தல் திருவிழா போன்றது என எல்லோரும் கூறுகின்றனர். உத்தர பிரதேசத்தின் எதிர்காலத்தை இந்தத் தேர்தல் முடிவு செய்யும். கடந்த முறை முலாயம் சிங் யாதவ் பதவியேற்றபோது இரண்டு புதிய பாலங்கள் திறக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் இன்னும் அவை ஏன் கட்டப்படவில்லை? உ.பி-யில் பித்தளைத் தொழிலை அழித்தது யார்?

    நேர்மையாக சொன்னால் இந்த மாநிலத்தில் வேலை வாய்ப்புகளுக்கு எந்த உறுதியும் கிடையாது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் காசியிலுள்ள சுற்றுலா மையங்கள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் இளைஞர்கள் அதிகளவில் வேலைவாய்ப்பு பெறுவர்.



    2022-ம் ஆண்டு இந்தியா 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் பெற வேண்டும்.என்பதே எங்களது இலக்கு. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக விவசாயிகளின் கடன்களை நாங்கள் தள்ளுபடி செய்வோம். விவசாயிகள் சமுதாயம் அதிகாரத்திற்கு வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ‘‘மோடியின் மார்பளவு 56 இஞ்ச் என்பது உண்மையானால் அவர் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யட்டும்” எனஉத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்சில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மோடிக்கு சவால் விட்டது குறிப்பிடத்தகுந்தது.

    Next Story
    ×