search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணிப்பூரில் நாளை சட்டசபை தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
    X

    மணிப்பூரில் நாளை சட்டசபை தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தின் 60 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் மார்ச் 4(நாளை) மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

    இதில் 38 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்காக கிழக்கு இம்பால், மேற்கு இம்பால், பிஷன்பூர், சூரச்சந்த்பூர் மற்றும் காங்போக்பி ஆகிய பகுதிகளில் 1643 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. முதல் கட்டத் தேர்தலில் 168 வாக்காளர்கள் போட்டியிடுகின்றனர்.



    மணிப்பூரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 19,02,562. இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 9,28,573. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 9,73,989. புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 45,642.

    மார்ச் 11-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
    Next Story
    ×