search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரகாண்டில் தேர்தலைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்த மாவோயிஸ்டுகள்
    X

    உத்தரகாண்டில் தேர்தலைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்த மாவோயிஸ்டுகள்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கும்படி மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அல்மோரா:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 15-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வேட்பாளர்கள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மாவோயிஸ்டுகள் தேர்தலைப் புறக்கணிக்கும்படி பொதுமக்களை வலியுறுத்தத் தொடங்கி உள்ளனர்.

    அல்மோரா மாவட்டம் சோமேஷ்வர் பகுதியில் இன்று பல்வேறு இடங்களில் மாவோயிஸ்டுகளின் போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் காணப்பட்டன. சில பகுதிகளில் துண்டு பிரசுரங்களும் வீசி எறியப்பட்டிருந்தன.

    இந்த விளம்பரங்களில், பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், உள்நாட்டுப் போரை தொடங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    அந்த பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டதாகவும், இது மிகவும் தீவிரமான பிரச்சனை என்பதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு கூறியுள்ளார். மேலும், ஆயுதம் தாங்கிய போலீசார் அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கூறினார்.

    இதேபோல் கடந்த 2-ம் தேதி நைனிடால் மாவட்டம் தாரி அருகே அரசு அதிகாரியின் வாகனத்தை எரித்த மாவோயிஸ்டுகள், தேர்தலை அச்சுறுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×