search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மசூத் அசார் மீது தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரப்பூர்வ உத்தரவு
    X

    மசூத் அசார் மீது தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரப்பூர்வ உத்தரவு

    பதான்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் மற்றும் 3 பேர் மீது அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானதளத்தில் இந்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி நான்கு பாகிஸ்தான்  தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் ஏழு ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த விவகாரத்தை  தேசிய புலனாய்வு ஆணையம் விசாரித்து வந்தது.   

    இந்நிலையில், பதான்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் மற்றும் 3 பேர்  மீது அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.

    முன்னதாக, மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவிப்பது தொடர்பாக ஐநா சபையில் இன்று அமெரிக்கா நடவடிக்கை  எடுத்துள்ள  நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு
    சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

    அசார் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த நடவடிக்கைகளை சீன அரசாங்கத்திடம் கொண்டு சென்றுள்ளதாக வெளியுறவுத்  துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 3 நாடுகளும் மசூத் அசாருக்கு தடை விதித்துள்ளது.
    Next Story
    ×