search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளத்தில் ரூ.2000 கள்ள நோட்டுகள்: 50 சதவீத பாதுகாப்பு இல்லை என்று நிபுணர்கள் கருத்து
    X

    மேற்கு வங்காளத்தில் ரூ.2000 கள்ள நோட்டுகள்: 50 சதவீத பாதுகாப்பு இல்லை என்று நிபுணர்கள் கருத்து

    மேற்கு வங்காளத்தில் ரூ.2000 கள்ள நோட்டுகள் சிக்கியது. இதில் 50 சதவீத பாதுகாப்பு அம்சங்களே இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    கொல்கத்தா:

    மத்திய அரசு பழைய ரூ 500, ரூ 1000 நோட்டுகளை ஒழித்து விட்டு புதிதாக ரூ. 2000 நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது. கள்ள நோட்டுகள் தயாரிக்க முடியாதபடி இதில் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

    இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் வங்காளதேச எல்லைப்பகுதியில் ரூ. 2000 கள்ள நோட்டுகள் சிக்கியுள்ளன. எல்லைப் பாதுகாப்பு படையினரும் தேசிய புலனாய்வு அமைப்பினரும் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 4 கட்டுகள் கொண்ட ரூ. 2000 நோட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இவை அனைத்தும் கள்ள நோட்டுகள் ஆகும்.

    இந்த நோட்டுகள் பார்ப்பதற்கு அசல் ரூ. 2000 நோட்டுகள் போலவே எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது. கலர் போட்டோ காப்பியாகவோ அல்லது ஸ்கேனிங் செய்தோ தயாரிக்கப்பட்டதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் இது எதுவும் இல்லாமல் புதிதாக வடிவமைக்கப்பட்டு அதே கலர் கலவையுடன் அச்சடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ரூ. 2000 நோட்டின் பின்புறம் உடன் சந்திராயன், மொழிபேனல், சுத்தமான இந்தியா லோகோ, ஆண்டு முதலியவை அப்படியே புதிதாக காப்பி எடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் உள்ள ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து உள்பட அனைத்து குறியீடுகளும் தனித்தனியாக காப்பி எடுத்து அதைக்கொண்டுபுதியது போல் ரூ. 2000 நோட்டுகளை தயாரித்து உள்ளனர்.

    ஆனால் பேப்பரின் தரம், மெஜந்தா கலர் ஆகியவை மட்டும் பொருந்தவில்லை. கலர் கொஞ்சம் இருட்டடித்தது போல் இருக்கிறது. இதை வைத்துதான் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்படுகிறது.

    கள்ள நோட்டுகளை ஆய்வு செய்த பின்பு நிபுணர்கள் கூறுகையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூ.2000 நோட்டுகளில் 100 சதவீத பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. 50 சதவீத பாதுகாப்பு அம்சங்களே உள்ளன. இதனால் கள்ள நோட்டுகளை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் என்று தெரிவித்தனர்.

    ஆனால் எல்லைப் பாதுகாப்புபடை அதிகாரிகள் கூறும் போது ரூ. 2000 நோட்டுகளை வைத்து கள்ள நோட்டுகள் தயாரிப்பது கடினமான காரியம். இதில் கள்ள நோட்டு கும்பல் வெற்றி பெறவில்லை. வங்காள தேசத்தில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இந்தியாவுக்குள் கடத்தப்படுகிறது. கள்ள நோட்டுகளை எளிதில் கண்டுபிடித்து விடுகிறோம் என்று தெரிவித்தனர்.
    Next Story
    ×