என் மலர்

செய்திகள்

ரே‌ஷன் சர்க்கரைக்கு மானியம் ரத்து: மத்திய அரசு முடிவு
X

ரே‌ஷன் சர்க்கரைக்கு மானியம் ரத்து: மத்திய அரசு முடிவு

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மத்திய அரசு அடுத்த மாதம் தாக்கல் செய்ய இருக்கும் புதிய பட்ஜெட்டில் சர்க்கரை மானிய திட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மலிவு விலையில் சர்க்கரை கிடைக்கச் செய்வதற்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.

பொதுச் சந்தையில் இருந்து சர்க்கரையை மாநில அரசுகள் கொள்முதல் செய்து அதை ரே‌ஷன் கடைகள் மூலம் கிலோ ரூ.13.50 என்ற மானிய விலையில் விற்பனை செய்து வருகின்றன. அதற்காக கிலோ ஒன்றுக்கு ரூ.18.50 வீதம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் 40 கோடி பேர் பலன் அடைகிறார்கள்.

மத்திய அரசு அடுத்த மாதம் தாக்கல் செய்ய இருக்கும் புதிய பட்ஜெட்டில் சர்க்கரை மானிய திட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் யார் என்று வரையறுக்கப்படாத நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது சரியானதாக இருக்காது என்றும், சர்க்கரை மானிய தொகையை மாநில அரசுகள் தவறாக பயன்படுத்தலாம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.

எனவே அடுத்த நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் சர்க்கரை மானிய திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.4500 கோடி மிச்சமாகும்.

சர்க்கரை மானியத்தை மத்திய அரசு ரத்து செய்யலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உணவுத்துறை அமைச்சகம் ஏற்கனவே தெரியப்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story