என் மலர்

  செய்திகள்

  மேற்கு வங்காளத்தில் கள்ளநோட்டு கடத்தல் கும்பல் தலைவன் கைது
  X

  மேற்கு வங்காளத்தில் கள்ளநோட்டு கடத்தல் கும்பல் தலைவன் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியில் பதுங்கி இருந்த கள்ளநோட்டு கடத்தல் கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டார்.
  புதுடெல்லி:

  கள்ளநோட்டு கடத்தல் தொடர்பாக ஒரு கும்பலை கேரள போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இதுதொடர்பாக 6 பேர் பிடிபட்டனர். ஆனால் கடத்தல் கும்பல் தலைவன் முகமது அஷ்ரபுல் மட்டும் தப்பிச்சென்றார். இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

  இதைத்தொடர்ந்து முகமது அஷ்ரபுல்லை தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியில் பதுங்கி இருந்த அவர் கைது செய்யப்பட்டார். இந்த தகவலை தேசிய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

  இதையடுத்து கைது செய்யப்பட்ட முகமது அஷ்ரபுல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 
  Next Story
  ×