search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக மருத்துவர் சுனிதி சாலமன், பாடகர் யேசுதாசுக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு
    X

    தமிழக மருத்துவர் சுனிதி சாலமன், பாடகர் யேசுதாசுக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

    மறைந்த தமிழக மருத்துவர் சுனிதி சாலமன், பாடகர் கே.ஜே.யேசுதாஸ் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    புது டெல்லி:

    ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

    எயிட்ஸ் நோய்க்கு எதிராகப் போராடிய தமிழக மருத்துவர் சுனிதி சாலமனுக்கு அவர் மறைவிற்குப் பின் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர் பிபின் கனத்ரா, தற்காப்பு கலையான களரியை கற்றுக்கொடுக்கும் மீனாட்சி அம்மாள், பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட 12,000 பேரை மீட்ட அனுராதா கொய்ராலா (நேபாளம்) ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, மறைந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா, மறைந்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சயீது ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பத்திரிகையாளர்களில் திரை விமர்சகர் பாவ்னா சோமையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. கலைஞர்களில் பாடகர் கே.ஜே.யேசுதாசுக்கு பத்ம விபூஷண் விருதும், இசைக் கலைஞர் விஷ்வா மோகன் பட்டுக்கு பத்ம பூஷண் விருதும், பாடகர் அனுராதா பட்வால்க்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×