search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்: முதல் மந்திரி வேட்பு மனு தாக்கல்
    X

    உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்: முதல் மந்திரி வேட்பு மனு தாக்கல்

    உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அம்மாநில முதல் மந்திரி ஹரிஷ் ராவத் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
    புதுடெல்லி: 

    70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில், அம்மாநில முதல் மந்திரி ஹரீஷ் இரண்டு தொகுதிகளில், அதாவது ராவத் கிச்சா மற்றும் ஹர்த்வார் புறநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். கிச்சா தொகுதிக்கான வேட்பு மனுவை இன்று அவர் தாக்கல் செய்தார்

    உத்தரகாண்ட் அரசியல் வரலாற்றில் முதல் மந்திரி ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிடுவது இதுவே  முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×