search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘டிஜிட்டல் இந்தியா’வின் மறுபக்கம்: 402 போலீஸ் நிலையங்களில் தொலைபேசி இல்லை
    X

    ‘டிஜிட்டல் இந்தியா’வின் மறுபக்கம்: 402 போலீஸ் நிலையங்களில் தொலைபேசி இல்லை

    நாட்டில் உள்ள 402 காவல் நிலையங்களில் போன் வசதி இல்லை, 134 போலீஸ் நிலையங்களில் வாகன வசதி இல்லை என பல “இல்லை”கள், வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டில் சட்டம்- ஒழுங்கு, பெண்களின் பாதுகாப்பு போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்ளும் காவல் துறையின் நிலை குறித்து வெளியான அறிக்கை அனைத்து தரப்பினரையும் அதிர்சியும் , வேதனையையும் உண்டாக்கியுள்ளது.

    இந்தியாவில், காவல் துறையானது அந்தந்த மாநில அரசுகளின் வசம் உள்ளது. காவல் துறையினை நவீனப்படுத்துவதற்காக மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்தாலும், மத்திய உள்துறை அமைச்சகமும் பல கோடி ரூபாயை நிதியாக வழங்கி வருகிறது.

    இந்நிலையில், காவல்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியகம் (Bureau of Police Research and Development) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    இந்தியாவில் மொத்தம் 15,555 காவல் நிலையங்கள் உள்ளதாகவும் அதில், 188 காவல் நிலையங்களில் வாகனங்கள் இல்லை, 402 காவல் நிலையங்களில் தொலைபேசி வசதி இல்லை, 134 காவல் நிலையங்களில் ஒயர்லெஸ் வசதி இல்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனவரி 2016 வரை நாடு முழுவதும் காவல் துறையில் மொத்தம் 22,80,691 பேர் பணியில் உள்ளனர். அவர்களில் 5,56,539 பேர் மட்டுமே காவலர் குடியிருப்புகளை பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக 729 பொதுமக்களுக்கு ஒரு காவலர் என்ற விகிதாசாரத்தில் தற்போதைய நிலை உள்ளதாகவும், அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

    போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஒருவரே பல வேலைகளை செய்ய வேண்டியவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×