search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் பாரதீய ஜனதாவுடன் மீண்டும் நெருங்கும் ஐக்கிய ஜனதா தளம்: பொங்கல் விழாவுக்கு அழைப்பு
    X

    பீகாரில் பாரதீய ஜனதாவுடன் மீண்டும் நெருங்கும் ஐக்கிய ஜனதா தளம்: பொங்கல் விழாவுக்கு அழைப்பு

    பீகாரில் மாநில அரசு சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு நிதிஷ்குமார் அழைப்பு விடுத்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளின் மெகா கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது.

    முதல்-அமைச்சராக ஐக்கிய ஜனதாதளம் நிதிஷ் குமார் உள்ளார்.

    மோடி குஜராத் முதல்- மந்திரி பதவியில் இருந்து பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், பா.ஜ.க உடனான கூட்டணியை நிதிஷ்குமார் துண்டித்தது குறிப்பிடத்தக்கது பிரதமர் மோடியின் மிகப்பெரும் எதிர்ப்பாளராக அவர் கருதப்பட்டார்.

    ஆனால் கடந்த நவம்பர் மாதம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பை நிதிஷ் குமார் பாராட்டி வரவேற்று ஆதரவு தெரிவித்தார். அன்று முதல் நிதிஷ்குமார் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

    சமீபத்தில் பீகாரில் நடந்த விழாவில் பிரதமர் மோடியும் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர்.

    இந்த நிலையில் பீகாரில் மாநில அரசு சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் படி மாநில பா.ஜ.க தலைவர்களுக்கு நிதிஷ்குமார் அழைப்பு விடுத்தார்.

    ஆனால் முறையான அழைப்பு வரவில்லை என்று கூறி பீகார் பா.ஜ.க மூத்த தலைவர்கள் விழாவில் பங்கேற்க மறுத்து விட்டனர்.

    பா.ஜ.க தலைவர்களுடன் நிதிஷ்குமார் உறவை புதுப்பித்து இருப்பது ராஷ்டீரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரசிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க தலைவர்களை நிதிஷ்குமார் அழைத்தது ஏன் என்று காங்கிரசார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இதனால் பீகாரில் மெகா கூட்டணியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×