search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சியின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
    X

    உ.பி. தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சியின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலை அக்கட்சியின் தலைவர் மாயாவதி இன்று வெளியிட்டார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன்சமாஜ் கட்சி மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் தனித்து களமிறங்குகிறது, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் அக்கட்சி தொண்டர்கள் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.

    ஏற்கனவே, இரண்டு கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள பகுஜன்சமாஜ் கட்சி இன்று 100 பெயர்களை உள்ளடக்கிய மூன்றாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    மொத்தமுள்ள 403 தொகுதியில், இதுவரை 300 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு கூடிய விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×