search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
    X

    ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

    கடும் பனிப்பொழிவு காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
    ஸ்ரீநகர்:

    வடமாநிலங்களில் குளிர் அதிகமாக இருக்கிறது. காஷ்மீர், இமாசலபிரதேம் ஆகிய மாநிலங்களில் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்வது போல் பனிப்பொழிவு காணப்படுகிறது.  காலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. தலைநகர் ஸ்ரீநகரில் சாலைகளில் பனி உறைந்து கிடக்கிறது.

    வீடுகளின் கூரைகள், மரங்கள் வெள்ளை போர்வையை போர்த்தியது போல் பனிப்பொழிவால் மூடிக்கிடக்கின்றன. 4 நாட்களாக நிலவும் கடும் பனிப்பொழிவால் காஷ்மீரை பிற மாநிலங்களுடன் இணைக்கும் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. வான்வழி போக்குவரத்தும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. நான்காவது நாளாக இன்றும் இந்த நிலை நீடித்தது.

    இந்த நிலையில், காஷ்மீரில் ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தையும் காஷ்மீர் பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நாட்களில் பிற வகுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக கூறினார்.
    Next Story
    ×