என் மலர்

  செய்திகள்

  ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்த ஜனாதிபதி விமானத்தில் கோளாறு
  X

  ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்த ஜனாதிபதி விமானத்தில் கோளாறு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்கு புறப்பட்டு வந்த ஜனாதிபதி விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் டெல்லி திரும்பியது.
  புதுடெல்லி:

  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். அவரை தொடரந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.

  நடுவானில் பறந்தபோது, இயந்திரத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அந்த விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மாற்று விமானம் மூலம் சென்னைக்கு வந்து ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவாரா? அல்லது, அவரது சென்னை பயணம் ரத்து செய்யப்படுமா? என்பது தொடர்பான உறுதியான தகவல் ஏதும் ஜனாதிபதி மாளிகை வட்டாரத்தில் இருந்து வெளியாகவில்லை.
  Next Story
  ×