search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா- பாகிஸ்தான் அமைதி தீர்வு காண வேண்டும்: ஐ.நா.சபை
    X

    இந்தியா- பாகிஸ்தான் அமைதி தீர்வு காண வேண்டும்: ஐ.நா.சபை

    இந்தியா- பாகிஸ்தான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள மோதல் போக்கு குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பாங் கி மூன் பெரும் கவலை அடைந்துள்ளார். இரு நாடுகள் மத்தியிலும் அமைதி நிலவ வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

    புதுடெல்லி:

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் சரியான பதிலடியை கொடுக்கிறது.

    இதை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் ஐ.நா. சபையிடம் இந்தியா பற்றி புகார் கூறி உள்ளது. இந்தியாதான் அத்து மீறி தாக்குவதாக அந்த நாட்டு பிரதமர் நவாஸ் செரீப் ஐ.நா. சபையிடம் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    இந்தியா- பாகிஸ்தான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள மோதல் போக்கு குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பாங் கி மூன் பெரும் கவலை அடைந்துள்ளார். இரு நாடுகள் மத்தியிலும் அமைதி நிலவ வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

    சமீப கால சம்பவங்கள் பதட்டத்தை மேலும் அதிகரிக்கும் நிலையில் இருக்கின்றன. இதை தணித்துக்கொள்ள இரு நாடுகளும் தேவையான முயற்சி எடுக்க வேண்டும். இனிமேலும் உயிர் இழப்புகள் ஏற்படாமல் இருக்க எல்லா நடவடிக்கைகளையும் அவர்கள் செய்ய வேண்டும்.

    இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இரு நாடுகளும் அமைதியை நோக்கி செல்வதற்கு ஐ.நா. சபை தேவையான அத்தனை உதவிகளையும் செய்யும். உலக அமைப்புகளும் இதற்கு பக்க பலமாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×