search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளத்துக்கு புதிய ரூ.500 நோட்டுகளை ஒதுக்காமல் பாரபட்சம்: மம்தா பானர்ஜி
    X

    மேற்கு வங்காளத்துக்கு புதிய ரூ.500 நோட்டுகளை ஒதுக்காமல் பாரபட்சம்: மம்தா பானர்ஜி

    மேற்கு வங்காளத்துக்கு புதிய ரூ.500 நோட்டுகளை ஒதுக்காமல் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்துக்கு புதிய ரூ.500 நோட்டுகளை ஒதுக்காமல் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு நேற்று நேரில் சென்று அதிகாரிகளை சந்தித்து பண நெருக்கடி குறித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு இன்னும் மேற்கு வங்காளத்துக்கு புதிய ரூ.500 நோட்டுகளை அனுப்பி வைக்கவில்லை. ஆனால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு மட்டும் உடனடியாக இந்த மதிப்பிலான பணம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    அதே நேரம் 100, 50, 10 ரூபாய் நோட்டுகளை மட்டுமே எங்களது மாநிலத்துக்கு ஒதுக்கி வருகிறது. இது முற்றிலும் மேற்கு வங்காளத்தின் மீதான பாரபட்ச நடவடிக்கை ஆகும்.

    பண நெருக்கடிக்கு தீர்வு காண புதிய ரூ.500 ரூபாய் நோட்டுகளுடன், பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளையும் புழக்கத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

    இதுதொடர்பாக நாங்கள் விதித்த கெடு திங்கட்கிழமையுடன்(நாளை) முடிகிறது. இதை ஏற்காவிட்டால் நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டத்தில் குதிப்போம். மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையால் நாட்டில் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×