search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்டிகளுடன் வெள்ளை புலி.
    X
    குட்டிகளுடன் வெள்ளை புலி.

    திருப்பதி விலங்கியல் பூங்காவில் வெள்ளைப்புலி 4 குட்டிகள் ஈன்றது

    திருப்பதி விலங்கியல் பூங்காவில் அரிய வகையான வெள்ளை புலி 4 குட்டிகளை ஈன்றது ஊழியர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புலிக்குட்டிகளை பார்க்க பொதுமக்கள் ஆர்வமுடன் வருகிறார்கள்.
    நகரி:

    திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் ராணி என்ற பெண் வெள்ளை புலியும், கமலா என்ற ராயல் பெங்கால் பெண் புலியும் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த இரு புலிகளிடம் இருந்து இன பெருக்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டது.

    இதற்கு நல்ல பலன் கிடைத்தது. வெள்ளை புலியும், பெங்கால் புலியும் கருத்தரித்தன. இதையடுத்து இரண்டு புலிகளையும் பூங்கா ஊழியர்கள் கவனமுடன் பராமரித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் வெள்ளை புலியும், பெங்கால் புலியும் குட்டிகளை ஈன்றது.

    இதில் வெள்ளை புலிக்கு 4 குட்டிகளும், பெங்கால் புலிக்கு 3 குட்டிகளும் பிறந்தன. அனைத்து புலி குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றன. அவைகளை பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த பூங்காவில் புலி குட்டிகள் ஈன்றுவது இதுவே முதல் முறையாகும்.

    அரிய வகையான வெள்ளை புலி 4 குட்டிகள் ஈன்றது பூங்கா ஊழியர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புலிக்குட்டிகளை பார்க்க பொதுமக்கள் ஆர்வமுடன் வருகிறார்கள்.
    Next Story
    ×