search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது கடத்தியதாக முன்னாள் முதல் மந்திரி பேரன் கைது
    X

    மது கடத்தியதாக முன்னாள் முதல் மந்திரி பேரன் கைது

    பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் காருக்குள் மறைத்துவைத்து மது கடத்தியதாக முன்னாள் முதல் மந்திரி ஜித்தன்ராம் மாஞ்சியின் பேரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. நாட்டின் எந்தப்பகுதியிலும் சொட்டு சாராயம்கூட கிடைக்காமல் மதுவறண்ட மாநிலமாக பீகார் மாறிவிட்டதால் அம்மாநில குடிமகன்கள் போதையை தேடி பிறநாட்டு எல்லைக்குள்ளும் ஊடுருவ துணிந்து விட்டனர்.

    இந்நிலையில், இங்குள்ள கயா மாவட்டத்தில் கலால்துறை மற்றும் உள்ளூர் போலீசார் நேற்று மாலை தீவிரமாக வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர்,
    அப்போது கத்வாரா என்ற கிராமத்தின் அருகே வந்த ஒருகாரை வழிமறித்து சோதனையிட்டனர்.

    காருக்குள் 12 பீர் பாட்டில்களும் ஒரு விஸ்கி பாட்டிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, காரில் வந்த விக்கி குமார் மான்ஜி(30) மற்றும் அவரது நண்பர் ஒருவரை கைது செய்த போலீசார் அவர்கள்மீது மதுகடத்தல் வழக்குப்பதிவு செய்து கயா மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட விக்கி குமார் மான்ஜி, பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி ஜித்தன்ராம் மான்ஜியின் மகள் வயிற்றுப் பேரன் என்பதும், தனது மனைவியை கொன்றதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×