search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றிய கையெறி குண்டுகளில் பாகிஸ்தான் அடையாளங்கள்
    X

    தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றிய கையெறி குண்டுகளில் பாகிஸ்தான் அடையாளங்கள்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்காம் பகுதியில் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகளில் பாகிஸ்தான் தயாரிப்பு அடையாளங்கள் உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
    ஸ்ரீநகர்: 

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து வியாழக்கிழமையன்று தீவிரவாதிகள் சிலர் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய முயன்றனர். அப்போது நவ்காம் செக்டாரில் நடந்த கடும் சண்டையில் 4 தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றது. அவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 

    அந்த பொருட்களை ஆய்வு செய்ததில் அவை அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டவை என தெரியவந்துள்ளது.  

    இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஸ்ரீநகரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 

     சுட்டுக் கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகள்,  யுபிஜிஎல் வகை குண்டுகள் அனைத்திரும் பாகிஸ்தான் ராணுவ தயாரிப்புகளை தயாரிக்கும் நிறுவனங்களின் அடையாளங்கள் உள்ளன. இதன்மூலம், தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் உடந்தையாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. 

    ராணுவம் கைப்பற்றிய மருந்துப்பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களிலும் பாகிஸ்தான் அடையாளங்கள் உள்ளன.  தீவிரவாதிகளிடம் இருந்து பெட்ரோலியம் ஜெல்லிகள், தீப்பிடிக்கும் திரவம், லைட்டர்கள் உள்ளிட்ட தீப்பற்றக்கூடிய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  

     உரி தாக்குதலின்போதும் தீவிரவாதிகள் இதுபோன்ற வெடிபொருட்கள் மற்றும் தீப்பிடிக்கும் பொருட்களை பயன்படுத்தியுள்ளனர்.  

     இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×